எம்.சஹாப்தீன்-அலியாரின் கட்டுரையை தொடர்ந்ர் பார்வையிடுகின்ற போது அவர் நிந்தவூரின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் பற்றி சுருக்கமாக குறிப்பிட்டுள்ளார். ஆனால், நிந்தவூர் கிராமத்தின் தேசிய அரசியல் பிரதிநிதித்துவம் எனும் தலைப்பில் விரிவுரையாளர் ஏ.பி.சர்ஜுன் குறிப்பிட்டுள்ளார். ஆதலால், கட்டுரையாளர் அலியார் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை எழுதாது தவிர்த்திருக்க வேண்டும். கூறியது கூறலை விடவும், கூறாத விடயமொன்றினை சொல்லியிருந்தால நிந்தவூரின் வரலாற்றின் மற்றுமொரு விடயத்தினை எழுதியதாக இருந்திருக்கும். இவ்வாறு இந்நூலின் பல இடங்களில் கட்டுரையாளர்கள் மாறிமாறி சில விடயங்களை எழுதியுள்ளார்கள். இவர்களிடையே குழு ரீதியாக கட்டுரைகளை ஆய்வு செய்யப்படவில்லை என்பது தெளிவாகின்றது. பொதுவாக வரலாற்றுக் கட்டுரைகள் குழு ரீதியாக அலசி ஆராய வேண்டும். அவசரப்பட்டு வரலாற்றை எழுத முடியாது.
பார்வை தொடரும்........
குற்றச்சாட்டுக்கள் - 01
************************
நிந்தவூரின் வரலாற்றை எழுத முற்பட்டவர்களில் சிலர் தங்களின் கட்டுரையை மற்றவர்கள் பார்த்து விடக் கூடாதென்பதற்காக தமது ஆக்கங்களை கொழும்பில் அச்சகத்த்தில் ஒப்படைத்தாகவும் சொல்லப்படுகின்றது. இதனால், கட்டுரைகளை ஆய்வு செய்ய முடியவில்லை என நூல் வெளியீட்டோடு தொடர்புடையவர்கள் குறிப்பிடுகின்றார்கள். இதே வேளை, மலர் குழுவின் சுதந்திரத்திற்கு பிரதேச செயலகத்தில் உள்ள சிலர் தடையாக இருந்ததாகவும் குறிப்பிடுகின்றார்கள். ஆனால், பிரதேச செயலகம் நிந்தவூரின் வரலாற்றை எழுதும் பணியை மேற்கொண்வர்களின் சுதந்திரத்தில் தடைகளை ஏற்படுத்தவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. ஆனால், இக்குற்றச்சாட்டுக்களில் உள்ள உண்மைகளை அல்லாஹ் நன்கு அறிவான்.
குற்றச்சாட்டுக்கள் தொடரும்........
குற்றச்சாட்டுக்கள் தொடரும்........






0 comments:
Post a Comment