• Latest News

    April 23, 2015

    எதிர்வரும் 28ஆம் திகதி 19 வது திருத்தச் சட்டம் தோற்கடிக்கப்பட்டால் 29 ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படும்

    எதிர்வரும் 28ஆம் திகதி 19 வது திருத்தச் சட்டம் தோற்கடிக்கப்பட்டால் 29 ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    19ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படாமல் நாடாளுமன்றம் கலைக்கப்பட மாட்டாதென, ஜனாதிபதி மைத்திரி ஏற்கெனவே தெரிவித்திருந்தார். அரசியலமைப்பு திருத்தச் சட்ட மூலம் எதிர்வரும் 27ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, 28ஆம் திகதி வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது.

    இந்நிலையில் 19ஆவது திருத்தச் சட்டம் தோற்கடிக்கப்பட்டால் 29ஆம் திகதி நாடாளுமன்றத்தை கலைக்கவுள்ளதாக நேற்றைய தினம் நடைபெற்ற தேசிய  நிறைவேற்று சபையின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இதேவேளை புதிய தேர்தல் முறை குறித்து கட்சி தலைவர்களுக்கு விளக்கமளிக்க, எதிர்வரும் 29ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் கலந்துரையாடவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரி தெரிவித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: எதிர்வரும் 28ஆம் திகதி 19 வது திருத்தச் சட்டம் தோற்கடிக்கப்பட்டால் 29 ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படும் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top