• Latest News

    April 23, 2015

    கோட்டபாய ராஜபக்ஷவிற்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் நடந்து கொள்ள வேண்டாம்: ஞானசார தேரர்

    நாட்டில் நிலவிய பயங்கரவாதத்தினை தோற்கடித்த பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவிற்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் நடந்து கொள்ள வேண்டாம் என அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்வதாக பொதுபல சேனவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.

    பொதுபல சேனவின் தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே இதனை அவர் குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில் ' ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டம் இன்றுடன் நிறைவடைகின்றது.

    அந்த வகையில் மக்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. இந்த நிலையில் அரசாங்கம் முன்னைய அரசாங்கத்தில் மக்களுக்குச் சேவையாற்றிய அமைச்சர்களை கைது செய்துவருகின்றது.

    கடந்த காலத்தில் நாட்டில் நிலவிவந்த பயங்கரவாதத்தை தோற்கடித்து நாட்டிற்கு அமைதியை ஏற்படுத்திக் கொடுத்தவர்களில் கோட்டபாய ராஜபக்ஷவும் ஒருவர். அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல அபிப்பிராயம் உள்ளது. அதனை இல்லாமல் செய்வதற்கு தற்போதைய அரசாங்கம் முயன்று வருகின்றது.

    ஐரோப்பிய நாடுகளின் தமிழ் டயஸ்போரா மிகவும் வலிமையுடன் வளர்ச்சியடைந்து வருகின்றது. மேலும் வட-கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜா பெருமாள் நாட்டிற்கு வருகை தந்துள்ளார். இவை அனைத்தும் நாட்டிற்கு ஆபத்தே. இந்த நிலையில் யுத்தத்தை வெற்றி கொண்டவர்களை தண்டிக்க முற்படுவது மேலும் ஆபத்தையே ஏற்படுத்தும். கோட்டபாய எந்தவித தவறும் செய்யவில்லை. அவர் நாட்டுக்கு நாசம் செய்யவில்லை. மக்களுக்காக சேவையாற்றி அரசாங்க அதிகாரி எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கோட்டபாய ராஜபக்ஷவிற்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் நடந்து கொள்ள வேண்டாம்: ஞானசார தேரர் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top