மட்டக்களப்பு மாவட்டத்தில் வேகமாக பரவிவரும் டெங்கு நோய்க்கெதிராக இன்று
காலை மட்டக்களப்பு நகரில் பாடசாலை மாணவர்கள் கவனயீர்ப்பு பேரணியில்
ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு சென்.திரேசா வித்தியாலம் ஏற்பாடு செய்த இப்பேரணியில்
பெரும் எண்ணிக்கையிலான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
பாடசாலை முன்னால் ஆரம்பமான பேரணி பல வாசகங்களை தாங்கிய பதாதைகளை ஏந்திய
வண்ணம் லேடி மெனிங் ட்ரைவ், பார்வீதி, திருமலை வீதி,
ம்டடக்களப்பு---கல்முனை வீதி, பாலமீன்மடு வீதி உட்பட பல முக்கிய
வீதிகளுடாகச் சென்று மக்களுக்கு விழிப்பூட்டியது.
புனித திரேசா வித்தியால அதிபர் மாலதி பேரின்பராசா உட்பட பேர் டெங்கினால் பரிப்கு பலர் பேரணியில் இணைந்திருந்தனர்.
கடந்த மூன்று மாத காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயினால்
732 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மூவர் மரணமடைந்திருப்பதாகவும்
மட்டக்கப்பு மாவட்ட பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர்
எம்.சதுர்முகம் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment