• Latest News

    April 28, 2015

    மஹிந்தவின் தோல்விக்கு காரணம் கோத்தாபாய: இரா­ஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா

    ஐக்கிய மக்கள் சுதந்திரக் முன்னணி அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக செயல்பட்ட கோத்தாபாய ராஜபக்ஷவின் இனவாத செயல்பாடுகளே கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவின் தோல்விக்கு காரணமாக அமைந்தன , மாறாக பசில் ராஜபக்ஷ கார­ண­மல்ல. இதனை ஆயிரம் முறையும் கூறுவேன் என வீட­மைப்பு மற்றும் சமுர்த்தி இரா­ஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரி­வித்தார்.
    முன்னாள் ஜனா­தி­பதி மீண்டும் அர­சி­யலில் பிர­வே­சிக்க முற்­ப­டு­வா­ராயின் முன்­னைய கால­கட்­டத்தில் எமது நாட்டில் இன­வாத செயற்­பா­டு­களில் ஈடு­பட்ட சிலரின் செயற்­பா­டுகள் தொடர்பில் தவறவிட்­ட­வை­களை உணர்­வது அவ­சியம் எனவும் குறிப்­பிட்டார்.கொழும்பில் அமைந்­துள்ள தேசிய வீட­மைப்பு மற்றும் சமுர்த்தி அபி­வி­ருத்தி அமைச்சில் நேற்று வெள்ளிக்­கி­ழமை இடம் பெற்ற விசேட ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பி­லேயே வீட­மைப்பு மற்றும் சமுர்த்தி இரா­ஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா மேற்­கண்­ட­வாறு தெரிவித்தார்.
    இதன்போது இரா­ஜாங்க அமைச்சர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில், முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் தோல்­விக்கு முற்று முழு­வ­து­மாக கார­ண­மா­னவர் முன்னாள் பொரு­ளா­தார அமைச்சர் பசில் ராஜ­பக் ஷ அல்ல. முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவே ஆகும். இவ்­வா­றான நிலையில் கடந்த காலங்­களில் எமது நாட்டில் பொது­பல சேனா போன்ற சில பிரி­வி­ன­வாத சக்­தி­களின் செயற்­பா­டு­க­ளுக்கு முன்னாள் பாது­காப்பு செய­லாளர் தூண்­டுதல் அளிக்கும் முக­மாக செயற்­பட்­டமையினாலேயே சிறு­பான்மை சமூகம் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் மீது நம்­பிக்­கையை இழந்­தது.
    இவ்­வா­றான ஒரு நிலையே கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் மஹிந்த ராஜ­பக் ஷ தோல்­வி­ய­டைய முக்­கி­ய­மான கார­ண­மாக அமைந்­தது. மீண்டும் எமது நாட்டில் இன­வாத செயற்­பா­டு­களை மேற்­கொள்ள எந்த ஒரு தரப்­பி­னரும் எண்­ணக்­கூ­டாது. எமது நாடா­னது இன்று மூவின மக்­களும் சுதந்திரமாக வாழும் நாடாக காணப்படுகின்றது. அந்தவகையில் எமது நாட்டில் தொடர்ந் தும் ஜனநாயக போக்கை கடைப்பிடிப்பது அனைவரினதும் பாரிய பொறுப்பு என தெரிவித்தார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மஹிந்தவின் தோல்விக்கு காரணம் கோத்தாபாய: இரா­ஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top