விழுப்புரத்தில் கல்லூரி பேராசிரியை ஒருவர் தனது மாணவரை காதல் திருமணம் செய்து கொண்டு தற்போது பாதுகாப்பு கேட்டு பொலிசில் தஞ்சம் புகுந்துள்ளார்.
விழுப்புரம் சாலமேடு முத்தியால் நகரை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரது மகள் ரம்யா (23), தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வந்துள்ளார்.
அதே கல்லூரியில் பி.பி.ஏ. படித்து வந்த, விழுப்புரம் கே.கே. ரோடு பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (21) மற்றும் பேராசிரியையும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
கடந்த 29ம் திகதி காலை, ரம்யா வீட்டில் இருந்து திடீரென்று காணாமல் போயுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தந்தை கோவிந்தராஜ் விழுப்புரம் தாலுகா பொலிசில் புகார் செய்ததையடுத்து, பொலிசார் வழக்கு பதிவு செய்து ரம்யாவை தேடி வந்துள்ளனர்.
இந்நிலையில் வீட்டை விட்டு சென்ற ரம்யாவும், சதீஷ்குமாரும் விழுப்புரம் அருகே உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டு, விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
மேலும், பொலிசில் பேராசிரியை ரம்யா அளித்த மனுவில், நானும், சதீஷ்குமாரும் ஒருவரையொருவர் விரும்பினோம்.
இருவரும் திருமணம் செய்துகொள்ள நினைத்த போது, எங்கள் திருமணத்துக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டோம்.
எனவே எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ரம்யாவையும், சதீஷ்குமாரையும் தாலுகா பொலிசார் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்துள்ளனர்.
அப்போது மாஜிஸ்ட்ரேட்டிடம் ரம்யா கூறுகையில், நாங்கள் திருமண வயதை அடைந்துவிட்டோம்.
மேலும், நான் விருப்பப்பட்டு தான் சதீஷ்குமாரை திருமணம் செய்து கொண்டேன் எனவே எங்களை சேர்த்து வையுங்கள் என்று கூறியதால் இருவரும் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

0 comments:
Post a Comment