ஏ.எல்.எம்.நபார்டீன் –
மே தினம், உழைப்பாளர் சமுதாயத்தின் பெருமைகள் சொல்லி, உழைப்பின் புகழ்பாடும் உன்னதத் திருநாள். அமெரிக்க நாட்டின் சிகாகோ நகரில் 1890 மே முதல் நாளன்று நடைபெற்ற பேரணியில் தொழிலாளர்கள் 8 மணி நேர வேலை, முறையான ஊதியம் ஆகியவற்றை வலியுறுத்தி, ரத்தம் சிந்திப் போராடி, உயிர்ப்பலி தந்து பெற்ற உரிமை வரலாற்றை நினைவுறுத்தும் நாளே இன்றைய மேதின நாளாகும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அட்டாளைச்சேனை அமைப்பாளர் அதி உச்சபீட உறுப்பினருமாகிய ஏ.எல்.எம்.நஸீர் வெளியிட்டுள்ள மே தின வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள மே தின வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கையில்,
இத்திருநாளில் - உடலுழைப்பால் உலகுக்கு வளம் சேர்க்கும் தொழிலாளர் சமுதாய உடன்பிறப்புகளுக்கும், அவர்தம் குடும்பத்தார்க்கும் எனது உளமார்ந்த மே தின நல்வாழ்த்துக்கள தெரிவிக்கின்றேன். நாம் உண்ணும் உணவுப் பொருள்களிலும், அழகுற உடுத்தும் ஆடைகளிலும், வாழ்கின்ற வீடுகள், சாலை வசதிகள், போக்குவரத்து வசதிகள், மருத்துவ வசதிகள், பிற நுகர்பொருள்கள் உள்ளிட்ட அனைத்திலும் தொழிலாளர்களின் உழைப்பு உள்ளடங்கியிருத்தலை நாம் மறந்திடலாகாது.
இந்த உணர்வோடு - தொழிலாளர்களும், அவர்களின் குடும்பத்தாரும் நலமோடும் வளமோடும் வாழவேண்டும் என்பதில் மிக அக்கரையோடும் தூர நோக்கோடும் அன்று செயற்படுத்தி காட்டிய மறைந்த மாபெரும் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் காட்டிய வளியில் இன்றை எமது தலைவர் றஊப் ஹக்கீம் அதில் தனிக்கவனம் செலுத்தி தனது ஆட்சி அமைந்த காலங்களிலெல்லாம் தொலை நோக்கோடு பல திட்டங்களை செய்துவருகின்றார்.

இன்றைய நாளில் உறவுகளையும், உடமைகளையும் இழந்து விட்ட தொழிலாளர்களுக்கும், விசேடமாக நேபாளின் தொழிலாளர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும், பிரார்த்தனைகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன். என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் தனது மேதின வாழ்த்துச் செய்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:
Post a Comment