• Latest News

    August 07, 2015

    19 of 2,671 மு.காவின் கட்சியை விட்டு கட்சி தாவும் நிலையில் உள்ளவர்களை தடுக்கும் நோக்கில் சூறாசபை மேற்கொண்டு வரும் பல முயற்சி.

    அபு அலா -
    ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சியை மர்ஹூம் அஷ்ரப் அவர்களினால் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் பல துருவங்களாக ஒற்றுமையின்றி பெரும்பாண்மை கட்சிகளுடன் பிரிந்து செயற்பட்ட முஸ்லிம் சமூகத்தை ஒற்றுமைப்படுத்துவதற்காகவே தவிர வேற்றுமையை உருவாக்குவதற்கல்ல என்று பாலமுனை ஸ்ரீ-றிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழவின் முன்னாள் செயலாளரும் சூறா சபையின் இணைப்பாளருமான எம்.ஏ.சதாத் தெரிவித்தார்.

    பாலமுனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (சூறா சபை) இன் மத்திய குழத் தெரிவும்  பொதுக்கூட்டமும் மத்திய குழத் தலைவர் ஐ.எல்.சுலைமாலெவ்வை தலைமையில் பாலமுனை 3 ஆம் பிரிவில் இடம்பெற்றபோது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

    அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

    மர்ஹூம் அஷ்ரபினால் உருவாக்கப்பட்ட இந்த கட்சியை வழி நடாத்திச் செல்கின்ற உள்ளுர் அரசியல்வாதிகள் சிலர் ஸ்தாபக தலைவரின் வளிகாட்டலையும் அவரது கொள்கை கோட்பாடுகளையும் மறந்து செயற்பட்டு தன்னிச்சையாக செயற்பட்டு வருகின்றனர்.

    அவ்வாறான ஒரு போக்கு இன்று எமது கிராமத்திலும் எற்பட்டதன் காரணமாக இன்று நாங்கள் வேறொரு குழவாக செயற்படவேண்டிய தேவை ஏற்பட்டது. ஒரு அமைப்போ அல்லது ஒரு ஸ்தாபனத்தையோ வழி நடாத்திச் செல்லும் பொறுப்பாளர் அல்லது தலைவர் தன்னிச்சையாக செயற்படாது  கூட்டுப்பொறுப்புடன் செயற்படவேண்டும்.

    அவ்வாறு செயற்பட்டமையினாலேயே அதிருப்தியடைந்த நிலையில் இன்று பாலமுனை கிராமமான எமது கிராமத்திலும் பல்வேறு கட்சிகளின் தேர்தல் காரியாலயங்கள் திறந்து வைக்கப்பட்டு எமது கட்சியின் வாக்குகள் சிதறடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற ஒரு வரலாற்று ரீதியான பரிதாப நிலையினை இன்று நாம் காண்கின்றோம்.

    இவ்வாறான பரிவுகள் ஏற்பட்டால் எமது கட்சிக்கு எதிர்காலத்தில் பாதிப்புக்களை உருவாக்கும் இந்த அசாதாரண நிலைக்கு காரணமாணவர்களை எமது தலமை இணங்கண்டு கொண்டுள்ளது. எமது கிராமத்தின் வரலாற்றில் நூறு வீதமாக ஸ்ரீலங்க முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பால் ஒன்றினைந்து கட்சிக்காக இரவு பகலாக போராட்டம் செய்தவர்கள் தங்களை அரப்பணித்தவர்கள் இன்று உள்ளுர் அரசியல்வாதிகளின் பிழையான போக்கினால் வேறு கட்சிகளின்பால் தங்களை இணைத்துச்செல்கின்ற வரலாறுகளை எமது கிராமத்தில் இன்று காண்கின்றோம்.

    அவ்வாறான செயற்பாட்டிலிருந்து கட்சியை பாதுகாப்பதற்கும் கட்சியின் பால் அதிருப்தியுற்றவர்களையும் நாம் இன்று அரவனைத்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். எமது கிராமத்தை பொறுத்தவரையில் ஒரு கட்சியின் கிளை இருந்து வந்தது ஆனால் இன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி என்று பல கிளைகள் திறக்கப்பட்டு அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதனால் முற்றாக பாதிக்கப்படுவதும் எமது வேட்பாளர்களும் கட்சியும்தான். எனவே இவ்வாறான செயற்பாட்டிலிருந்து எமது கட்சியை இந்த மன்னில் பாதுகாப்பதற்காக எமது சூறாசபை இரவு பகலாக பல தியாகங்களை மேற்கொண்டு கட்சிக்கான எமது கிராமத்தின் ஆதரவினை அதிகரிக்கச் செய்கின்ற வேலையில் இறங்கியுள்ளோம்.

    எமது வளர்ச்சியை சகித்துக் கொள்ள முடியாதவர்கள் எங்களையும் எமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சூறா சபையினையும் வேறுவிதமான ஒரு நோக்கில் சித்தரித்து எங்களுக்கு நாளுக்கு நாள் இந்த கிராமத்தில் அதிகரிக்;கின்ற ஆதரவினையும் ஒத்துழைப்புக்களையும் நிறுத்திவடலாமென்று நினைக்கின்றனர். அவர்களது நோக்கம் ஒரு போதும் நிறைவேறாது.

    நாங்கள் தூய்மையானவர்களாகவும் கட்சியின் தலைமைத்துவத்துக்கும் கட்டுப்பட்டவர்களாக எமது பணியினை செய்து வருகின்றோம். அது மாத்திரமின்றி எமது கட்சியின் தலைமைக்கும் கட்சியின் உயர்பீட முக்கியஸ்தர்களுக்கும் எமது செயற்பாடுகள் பற்றியும் கட்சியின் வளர்ச்சிக்காக நாங்கள் உழைத்துவருகின்ற பொறிமுறைகள் சம்மந்தமாக எடுத்துக் கூறியுள்ளோம்.

    இன்று எமக்கு தேவை இந்த மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் ஸ்ரீலங்க முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிடுகின்ற மூன்று வேட்பாளரகளையும் வெற்றிபெறச் செய்து இந்த மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். இதற்காக இரவு பகலாக உழைக்க வேண்டியுள்ளது. கட்சியின் ஆதரவாளர்கள் நாளுக்கு நாள் பிரிந்து செல்கின்ற செயற்பாட்டினை மாற்றவேண்டும் என்ற நோக்கில் எமது கட்சியை விட்டு வேறு கட்சிக்கு செல்கின்ற அதிருப்தியடைந்தவர்களை சூறா சபையின் பால் இணைத்து எமது கட்சியின் வெற்றிக்காகவும் வளர்ச்சிக்காகவும் எமது தலைமையின் வியுகத்தை வெல்ல வைக்கின்ற செயற்பாடுகளில் உழைத்து வருகின்றோம்.

    இன்று எமது சமூகத்தின் உரிமைக்குரலாக திகழ்கின்ற ஸ்ரீலங்க முஸ்லிம் காங்கிரஸ் எனும் ஸ்தாபனத்தை வெற்றியடையச்செய்ய வேண்டிய தேவை எம் அனைவர் மீதுமுள்ள பொறுப்பாகும்.

    ஏனென்றால் இன்று எமது நாட்டிலுள்ள சிறுபான்மை சமூகத்தினர் பாரிய சவாலொன்றை எதிர்நோக்கி வருகின்றனர் அது என்னவென்றால் மீண்டும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசியல் மீள் பிரவேசமாகும்.

    இவரது அரசியல் மீள் பிரவேசமானது இந்த நாட்டில் வாள்கின்ற சிறுபான்மை சமூகத்தின மீது ஒரு விதமான அச்சத்தினை தோற்றவித்துள்ளது. ஒரு சில அற்ப சொற்ப இலாபங்களுக்காக எமது சமூகத்திலுள்ள அரசியல்வாதிகள் தங்களது இருப்பினை தக்கவைத்துக் கொள்வதற்காக முன்னாள் ஜனபதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வாகனத்தில் மறைமுகமாக சவாரி செய்து உங்கள் முன் வருவார்கள் இவர்களைப் பற்றி விழிப்பாக இருக்க வேண்டும்.

    எமது வாக்குகளை பிழையானவர்களுக்கு அளிக்காமல் எமது சமூகத்துக்காக குறிப்பாக சிறு பான்மையின மக்களின் இருப்பினை இந்த நாட்டில் மீண்டும் உயிர்பிப்பதற்கான தக்கவைத்துக் கொள்வதற்கான பாதையில் எமது கட்சி தலைமையினால் அம்பாறை மாவட்டத்தில் நியமிக்கப்பட்டு போட்டியிடுகின்ற மூன்று வேட்பாளர்களுக்கும் அதிகபடியான வாக்குகளை அளித்து வெற்றிபெறச் செய்து முதலில் எமது மாவட்டத்தில் சிறு பான்மை சமூகத்தினரின் இருப்பினை உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயத் தேவை எமக்குள்ளது.

    இன்று தமிழ் மக்கள் நூறுவீதமானவர்கள் அவர்களது உரிமைகளுக்காக குரல் கொடுக்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பால் ஒற்றுமைப்பட்டு ஒன்று திரண்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் மர்ஹூம் அஷ்ரபினால் உருவாக்கப்ட்ட எமது உரிமைக்குரலான ஸ்ரீலங்க முஸ்லிம் காங்கிரஸ்  கட்சி கீழ ஒன்றுபட வேண்டிய தேவை முஸ்லிம்; சமூகத்தின் மீதுள்ள பாரிய பொறுப்பாகும்.

    எமது நாட்டில் குறிப்பாக சிறு பான்மை சமூகத்தின் நூறு வீத ஆதரவினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையின் கீழ் உருவாக்கப்பட்ட நல்லாட்சியினை இல்லாமல் செய்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுடன் மறைமுகமாக கூட்டுச் சேர்ந்து நாங்கள் மைத்திரி அணி என்று நா கூசாமல் தேர்தல் களத்தில் குதித்துள்ள எமது சமூகம் சார்ந்த வேட்பாளர்ளை தோல்வியடையச் செய்து இந்த நாட்டில் நல்லாட்சியை மீண்டும் உருவாக்க வேண்டும்.

    இந்த நல்லாட்சியை மீண்டும் இந்த நாட்டில் உருவாக்குவத்றகாக பயணத்தில் எமது நாட்டிலுள்ள பெரும்பான்மை சமூகத்தினர் ஒற்றுமைப்பட்டு அணிதிரண்டுள்ளனர். அது மாத்திரமின்றி எமது சகோதர உறவுகளான தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின்பாலும் கிழக்குக்கு வெளியே தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கின்ற கொழும்பில் மனோ கனேசன் மலையகத்தில் திகாம்பரம் போன்ற தமிழ் தலைவர்கள் மற்றும் அவர்களது கட்சியின் பால் ஒற்றுமைப்பட்டுள்ளனர்.

    எனவே நாமும் எமது உரிமைக்குரலான ஸ்ரீலங்க முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கீழ் ஒற்றுமைப்பட்டு எமது கட்சி சார்பாக போட்டியிடுகின்றவர்களை வெற்றியடையச் செய்து இந்த நாட்டில் மீண்டும் நல்லாட்சியை உருவாக்குவத்றகான பங்காளரகளாக மாற வேண்டும் என்றார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: 19 of 2,671 மு.காவின் கட்சியை விட்டு கட்சி தாவும் நிலையில் உள்ளவர்களை தடுக்கும் நோக்கில் சூறாசபை மேற்கொண்டு வரும் பல முயற்சி. Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top