• Latest News

    August 20, 2015

    20 லட்சம் மூவின இலங்கை புலம்பெயர் வாக்காளர்கள் பங்குபற்றாமல் ஒரு ஜனநாயக நாட்டில் பொது தேர்தலொன்று நடந்தது: ரகீப் ஜெளபர்

    எம்.வை.அமீர்-
    20 லட்சம் மூவின இலங்கை புலம்பெயர் வாக்காளர்கள் பங்குபற்றாமல் ஒரு ஜனநாயக நாட்டில் பொது தேர்தலொன்று நடந்து முடிந்துள்ளதாக இலங்கை புலம் பெயர் தொழிலாளர்கள் கூட்டணியின் அமைப்பாளர் ரகீப் ஜெளபர் தெரிவித்தார்.

    நல்லாட்சி என்றும் இதற்குப் பெயர் கூட சூட்டப்பட்டிருக்கிறது ஒரு வேடிக்கையாகும். புலம்பெயர் மக்கள் என்பது  வெளிநாடுகளில் வசிக்கின்ற  இலங்கை மக்களாகும். புலம்பெயர் மக்கள் தனக்கு பொருத்தமான ஒரு ஆட்சியை தீர்மானிக்க இன்னும் 5 வருடங்கள் காத்திருக்க வேண்டுமா?. இந்த மக்கள் ஒன்று படாத வரை , ஒரு போதும் புறக்கணிக்கப் பட்ட அவர்களின் உரிமைகளை வென்றெடுக்க முடியாது. வாக்களிக்கும் உரிமையும் வசதியும் கிடைக்கு மிடத்து தான் , அரசாங்கம் புலம்பெயர் வாக்குகளில் தங்கி இருக்கும் ஒரு சுழலை உருவாக்கமுடியும் . மேலும் அதைகொண்டு புலம்பெயர் சமூகம் தனது பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள ஒவ்வொரு மட்டத்திலும் ஒரு பேரம் பேசும் சக்தியாக மாற்றமடையலாம். இந்த சிந்தனை புலம்பெயர் மக்கள் ஒரு குடையின் கீழ் ஒன்றுபடாமல் சாத்தியமாகாது. எனவே  இதனடிப்படையில் புலம்பெயர் மக்களும் அவர்களுடைய குடும்பமும் இன பேதமில்லாமல் ஒரு குடையின் கீழ் ஒன்றுபட வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாகவே தோன்றுகிறது.  என்றும் தெரிவித்தார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: 20 லட்சம் மூவின இலங்கை புலம்பெயர் வாக்காளர்கள் பங்குபற்றாமல் ஒரு ஜனநாயக நாட்டில் பொது தேர்தலொன்று நடந்தது: ரகீப் ஜெளபர் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top