• Latest News

    August 21, 2015

    ரணில் விக்கிரமசிங்க இன்று (21) சத்தியப் பிரமாணம்

    சுதந்திர இலங்கையின் 22 ஆவது பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று (21) சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்.



    ஜனாதிபதி செயலகத்தில் இன்று (21) காலை 10 மணிக்கு பிறக்கும் சுபவேளையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ரணில் விக்கிரமசிங்க புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளார்.

    இலங்கையின் வரலாற்றில் பொதுத் தேர்தலில் அதிகூடிய வாக்குகளைப் பெற்ற பெருமைக்குரியவர் என்ற வகையில் நடந்து முடிந்த தேர்தலில் 5,00,566 விருப்பு வாக்குகளை ரணில் விக்கிரமசிங்க பெற்றுள்ளார்.

    பொதுத் தேர்தலில் 50,98,927 வாக்குகளைப் பெற்றுக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராகத் திகழும் ரணில் விக்கிரமசிங்க நாட்டில் நல்லாட்சியைக் கட்டியெழுப்புவதற்காக அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

    அரசியலில் நேர்மையும் கறைபடியாத கரங்களையும் கொண்ட சிறந்த தலைவராக நாட்டு மக்களின் பாராட்டுக்கு உரித்தான ரணில் விக்கிரமசிங்க முதல் தடவையாக 1993 ஆண்டு மே 7 ஆம் திகதி இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பிரதமராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

    அப்போதைய ஜனாதிபதி டீ. பி. விஜேதுங்கவின் முன்னிலையிலேயே அன்று சத்தியப் பிரமாணம் இடம் பெற்றது. 22 வருடங்களுக்குப் பின்னர் தற்போது 22 ஆவது பிரதமராகப் பதவியேற்கின்றார்.

    1993 ஆம் ஆண்டு அவர் பிரமராகப் பதவியேற்க முன்பதாக கைத்தொழில் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பம், கல்வி, இளைஞர் விவகாரம் ஆகிய அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளார்.

    ரணில் விக்கிரமசிங்க இரண்டாவது முறையாக 2001 டிசம்பரிலும் மூன்றாவது முறையாக இந்த வருடத்தின் ஜனவரி மாதத்திலும் பிரதமராகச் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டவராவார்.

    சுதந்திர இலங்கையின் பிரதமர்களாக டீ. எஸ். சேனநாயக்கா, டட்லி சேனநாயக்கா, சேர். ஜோன். கொத்தலாவல, விஜயானந்த தஹநாயக்க. எஸ். டபிள்யூ. ஆர். டீ. பண்டாரநாயக்க, சிறிமாவோ பண்டார நாயக்க, ஜே. ஆர். ஜயவர்தன. ஆர். பிரேமதாச. டீ. பி. விஜேதுங்க, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ரத்னசிறி விக்ரமநாயக்க, டி. எம். ஜயரத்ன ஆகியோர் பதவி வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

    எளிமையாக நடைபெறும் பதவியேற்பு வைபவத்தில் முன்னாள் அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், கட்சிகளின் தலைவர்கள், வெளிநாட்டு ராஜதந்திரிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்
    AR
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ரணில் விக்கிரமசிங்க இன்று (21) சத்தியப் பிரமாணம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top