• Latest News

    August 30, 2015

    பிரதீப் எக்னெலிகொட கொலையாளிகள் இலட்சாதிபதிகள்! "திவயின"அதிர்ச்சித் தகவல்

    ஊடகவியலாளர் பிரதீப் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவத்துடன் தொடர்புடைய ராணுவ புலனாய்வாளர்கள் தற்போது இலட்சாதிபதிகளாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

    கடந்த அரசின் காலத்தில் கோத்தபாயவுக்கு நெருக்கமாக இருந்த ராணுவப் புலனாய்வாளர்கள் விடயத்தில் யாரும் தலையிடாத நிலை காணப்பட்டுள்ளது. அதன் காரணமாக அவர்கள் அனைவரும் முறைகேடான வழிகளில் பெரும் பணம் உழைத்துக் கொண்டுள்ளார்கள்.

    ஊடகவியலாளர் பிரதீப் எக்னெலிகொடவின் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய ராணுவ புலனாய்வுப் பிரிவின் லெப்டினன்ட் கேணல் அதிகாரிக்கு அத்துருகிரிய பிரதேசத்தில் கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதி கொண்ட வீடு உள்ளது.

    நீச்சல் தடாகம், பூந்தோட்டம் என்பனவும் வீட்டுத் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான செலவுகள், அவரது வருமானம் என்பன பற்றியெல்லாம் இதுவரை யாரும் கேள்விகளை முன்வைக்கவில்லை.

    ராணுவப் புலனாய்வு என்ற பெயரில் ஒருசில அதிகாரிகளின் இவ்வாறான முறைகேடான செயற்பாடுகள் காரணமாக ஒட்டுமொத்த ராணுவத்தின் நற்பெயரும் கெட்டுப் போகின்றது. எனவே இவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்று திவயின பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    TW-
     
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பிரதீப் எக்னெலிகொட கொலையாளிகள் இலட்சாதிபதிகள்! "திவயின"அதிர்ச்சித் தகவல் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top