• Latest News

    August 16, 2015

    ஜனாதிபதியின் அதிரடிக்கு காரணம் என்ன? வெளிவந்த புதிய தகவல்!

    நீண்டகாலமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஏமாற்றி, பொய் கூறி, கட்சிக்கும் தலைவருக்கும் பல துரோக செயல்களை செய்ததன் காரணமாகவே சுசில் பிரேமஜயந்த மற்றும் அனுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோரை ஜனாதிபதி கட்சியின் பதவிகளில் இருந்தும் உறுப்புரிமையில் இருந்தும் நீக்கியதாக தெரியவருகிறது.
    இவர்கள், மகிந்தவுக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை தீர்க்க தலையிடுவதாக கூறி, ராஜபக்சவுக்கு சார்பாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிராகவும் செயற்பட்டுள்ளதுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இணையான பெயரில் கட்சியை ஒன்றை பதிவு செய்யும் நடவடிககைகளில் ஈடுபட்டுள்ளனர்.
    விமல் கீகனலே என்பவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள ஸ்ரீலங்கா ஜாதிக பெரமுன என்ற கட்சியை 50 லட்சம் ரூபா கொடுத்து கொள்வனவு செய்து அந்த கட்சியின் பெயரை ஸ்ரீலங்கா சுதந்திர முன்னணி என பெயர் மாற்றம் செய்து சின்னமாக பூச்சாடியையும் பெற்றுள்ளனர்.
    சுசில், அனுர ஆகியோர் இதனை முன்னின்று மேற்கொண்டுள்ளதுடன் கட்சியை கொள்வனவு செய்வதற்கான பணத்தை மகிந்த ராஜபக்சவிடம் இருந்து பெற்றுக்கொண்டுள்ளனர்.
    ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இணையான பெயரை கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திர முன்னணி என்ற பெயரை இரகசியமான முறையில் பெற்றுக்கொண்டமை சுதந்திரக் கட்சிக்கு செய்யும் துரோகமும், மோசடியுமாகும்.
    கட்சி என்பதற்கு பதிலாக முன்னணி என்று மட்டும் இவர்கள் புதிய கட்சியின் பெயரில் மாற்றம் செய்துள்ளனர். இதனை பதிவு செய்ய தேர்தல் ஆணையாளரின் அனுமதியை பெறுவதும் சிரமமானது.
    பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியின் பெயருக்கு இணையான பெயரை கொண்டதும் மக்களை குழப்பும் வகையிலுமான பெயரை எவருக்கும் வழங்க முடியாது.
    எவ்வாறாயினும் இது குறித்து தேர்தல் ஆணையாளரிடம் கலந்துரையாடல்களை மேற்கொள்ளாது, விமல் கீகனகேவிடம் கட்சியை கொள்வனவு செய்து ஆறு நாட்களுக்குள் சகார என்பவரை கட்சியின் தலைவராகவும் நியமித்துள்ளனர்.
    சுசில் பிரேமஜயந்தவும் அனுர பிரியதர்ஷன யாப்பாவும் இது குறித்து ஜனாதிபதி மாத்திரமல்ல தேர்தல் ஆணையாளருக்கும் அறிவிக்கவில்லை.
    எவ்வாறாயினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இந்த விடயம் பற்றிய தகவல் தெரியவந்துள்ளது. இதனையடுத்தே சுசில் மற்றும் அனுர ஆகியோரை ஜனாதிபதி பதவிகளில் இருந்தும் உறுப்புரிமையில் இருந்தும் நீக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஜனாதிபதியின் அதிரடிக்கு காரணம் என்ன? வெளிவந்த புதிய தகவல்! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top