• Latest News

    August 05, 2015

    அதிகூடிய ஜ.தே.கட்சி ஆட்சி அமைக்கும் சாய்ந்தமருது மக்கள் முன்னிலையில் அஸ்வன் சக்காப் மௌலானா

    எம்.வை.அமீர்-                      
    எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் அதிகப்படியான ஆசனங்களை ஜ.தே.கட்சி கைப்பற்றி புதுயுகம் கானும் புதிய பாராளுமன்றம் ஒன்றை அமைக்கும். இவ்வாறு கூறுகின்றார் ஜ.தே.கட்சியின் கல்முனை தொகுதி பிரச்சார செயளாலரும் முஸ்லிம் சமய கலாச்சார அமைச்சின் இணைப்பாளருமான அஸ்வான் சக்காப் மௌலானா.

    ஜ.தே.கட்சியூடாக போட்டியிடும் தாயாகமகே மற்றும் ரசாக் சட்டத்தரனி அவர்களை ஆதரித்து நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

    நீண்டகாலமாக ஜ.தே.கட்சி இந்த நாட்டில் மூடிகிடந்ததை யாரும் அறிந்ததே. கடந்த கொடுங்கோல் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஸ ஜ.தே.கட்சியை பலவீனப்படுத்தி ரணில் விக்கிரமசிங்கவை ஆட்டம்கான செய்ய முற்பட்டபோது எந்த சந்தர்ப்பதிலும் கட்சியைப்பலமாக இறுகப்பிடித்து பல எதிர்புகள் வந்த போதிலும் அசைக்க முடியாமல் ஜ.தே.கட்சியை யாருக்கும் தாரைவார்த்து கொடுக்காமல் நிலைநிறுத்திக்காட்டிய பெருமைக்குரியவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

    ஜ.தே.கட்சியின் ஆட்சிக்காலத்திலே முஸ்லிம்களுக்கான அடிப்படைவசதிகளை ஏற்படுத்தி தன்மானத்துடன் வாழக்கூடிய சந்தர்ப்பதை தந்து தமிழ்ஈழ விடுதலைப் புளிகளோடு யுத்த நிறுத்த ஒப்பந்தம் செய்து இந்த நாட்டிலே யுத்தம் இல்லாமல் சிறந்ததொரு ஆட்சியைக் கண்டோம் பசி பட்டினியை இல்லாமல் ஆக்கி விலைவாசி உயர்வு என்பதற்கே இடமில்லாமல் சந்தோசமான புதிய எழுச்சியை ஜ.தே.கட்சியூடாக நாம் கன்டோம். அவை எல்லாவற்றையும் தவிடுபொடியாக்கி

    புதவி பட்டம் என்று மோகம்பிடித்த ஒரு சில கட்சிகள் மகிந்த அரகாங்கத்தோடு சேர்ந்து ஜ.தே.கட்சியை பலவீனப்படுத்தியவர்கள் இன்று ரணில் விக்கிரமசிங்கவோடு கைகோர்த்து இந்த நாட்டுக்கு ரணில் விக்கிரமசிங்கதான் சரியான தலைவர் என்று கூறுகிரார்கள்.

    இனியும் மக்கள் ஏமாறமாட்டார்கள் யாருக்கு வாக்களிக்க வேன்டும் யாரை பாராளுமன்றம் அனுப்ப வேண்டும் என்பதை மக்கள் தீர்மானித்து விட்டார்கள் ஆகவே எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில்  ஜ.தே.கட்சி பெரும்பான்மை பலத்தோடு ஆட்ச்சிமைத்து அம்பாறை மாவட்டத்தில் சிறந்ததொரு அமைச்சராக தயாகமகே அவர்கள் வருவதோடு பிரதமராக வரயிருக்கிற ரணில் விக்கிரமசிங்க அவர்களின் கரத்தை பற்றிபிடித்து சிறந்ததொரு ஆட்ச்சியை ஏற்படுத்துவோம் இவ்வாறு கூறுகிறார் அஸ்வான் சக்காப் மௌலானா.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அதிகூடிய ஜ.தே.கட்சி ஆட்சி அமைக்கும் சாய்ந்தமருது மக்கள் முன்னிலையில் அஸ்வன் சக்காப் மௌலானா Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top