யு.கே.காலித்தீன்-
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஒழுங்கு செய்திருந்த அம்பாறை மாவட்ட இளைஞர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சிப் பாசறை (13)ம் திகதி சாய்ந்தமருது லீ மெரிடியன் கேட்போர் கூடத்தில் மிகவும் சிறப்பான முறையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர்களுக்கான
ஒருங்கிணைப்பாளர் ரிஷ்தி ஷெரிப் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
அம்பாறை மாவட்ட இளைஞர்களுக்கான உணர்வுபூர்வமான முறையில் திரண்டிருந்த இளைஞர்கள் பங்குகொண்ட இம்மாபெரும் மகாநாட்டுக்கு பிரதம அதிதியாக கிழக்குமாகாண சபையின் உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நிச்சயிக்கப்பட்ட தேசியப்பட்டியல் வேட்பாளருமான ஏ.எம்.ஜெமீல் கலந்து கொண்டார்.
பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய ஜெமீல், இந்த மாகாணம் மறைந்த தலைவர் மர்ஹும் அஷ்-சைய்து எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் மறைவைத் தொடர்ந்து கடந்த பதினைந்து வருடங்களாக பாழடைந்து கிடக்கிறது என்றும், அந்த நிலைமை இன்னும் படு மோசமாகிக் கொண்டு செல்வதாகவும், குறைந்தது இந்த முறை தேர்தலிலாவது மக்கள் ஒரு பாரிய அரசியல் தலைமைக்கான மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.
மேலும் இன்றைய இளைஞர்களை நாளைய தலைவர்களக்குவோம் எனும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு தலைமைத்துவ பயிற்சிகளை வழங்கிவரும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் இவ்வாறான ஒன்றுகூடுவது காலத்தின்
தேவையாகவுள்ளது எனவும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய ஜெமீல், மாற்றத்துக்கான வாய்ப்பினை அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரிசார்ட்
பதியுதீனும் தற்போது சாத்தியப்படுத்தி இருப்பதாகவும், அம்பாறை மாவட்டத்தில் தலைசிறந்த பத்து வேட்பாளர்கள் இப்பணியை நோக்கி பயணிப்பதாகவும், இந்த பணியை சாத்தியப்படுத்த தன்னை முழுமையாக அற்பணித்து இந்த மாற்றத்தை ஏற்படுத்த தன்னோடு இணையுமாறும் இளைஞர்களாகிய உங்களிடத்தில்
விநயமாக கேட்டுக் கொள்கிண்றேன் என்று இளைஞகள் மத்தியில்
கேட்டுக் கொண்டார்.
சத்தியம்
என்றாவது ஒருநாள் வென்றே தீரும் அசத்தியம்
என்றும் நிலைநிக்காது அழிந்து போயிடும், என்றும் உண்மையின் பக்கம் அணிதிரளுமாறும் அங்கு கூடியிருந்த இளைஞர்களை கேட்டுக்கொண்டார். அதன் பின்னர் அவரது கேள்விகளுக்கு
பதிலளித்தாற் போல் மாகாநாட்டில் குழுமியிருந்த இளைஞர்கள் தக்பீர் முழக்கத்துடன் அதனை
வரவேற்றனர்.
ஸ்ரீ.ல.மு.காங்கிரஸின்
ஸ்தாபாகத் தவிசாளரும் முன்னால் ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சருமா வேதாந்தி சேகு இஸ்ஸத்தின்,
கல்முனை மாநகர சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் உறுப்பினர் சீ.எம்.முபீத், முன்னால் கிண்ணியா நகர பிதா டாக்டர் ஹில்மி மஹ்ரூப், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கல்முனைத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் சீ.எம்.ஹலீம் உட்பட மற்றும் உலமா பெருந்தகைகளும் கலந்து சிறப்பித்தனர்.

0 comments:
Post a Comment