• Latest News

    November 29, 2015

    பாலமுனை வைத்தியசாலைக்கு 03 மாடி கட்டிடத்திற்கு கிழக்கு சுகாதார அமைச்சர் நடவடிக்கை

    அபு அலா -
    சின்னப் பாலமுனை சஹ்வா குர்ஆன் மத்ரிஸாவுக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் இன்று (29) திடீர் விஜயத்தை மேற்கொண்டு அங்கு நிலவும் குறைபாடுகளை நேரில் சென்று பார்வையிட்டார்.

    சஹ்வா குர்ஆன் மத்ரிஸாவின் குறைபாடுகளைப்பற்றி கட்டார் நாட்டு மீஸான் அமைப்பினர் சுகாதார அமைச்சருக்கு விடுத்த வேண்டுகோளுக்கமைவாகவே இந்த விஜயம் இடம்பெற்றது.
     
    இந்த விஜயத்தின்போது சுகாதார அமைச்சர் மத்ரிஸாவின் சகல விடயங்களையும் பார்வையிட்டதன் பின்னர் அங்கு ஒரு கலந்துரையாடலையும் நடாத்தினார்.
     
    இதன்போது மத்ரிஸாவின் பிரதி அதிபர் மௌலவி என்.பி.எம்.நஜாத் ஷஹ்வி குர்ஆன் மத்திரிஸாவின் நிலைமையைப்பற்றி அமைச்சரிடம் எடுத்துரைக்கையில்,
    தற்போது 80 மாணவர்கள் குர்ஆனை கற்றுவருவதாகவும், இதில் 10 மாணவர்கள் குர்ஆனை பூரணமாக ஓதி நிறைவுசெய்த நிலையில் வெளியேறவுள்ளதாகவும் தெரிவித்தார். அத்துடன் 2016 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர்கள் 30 பேர் உள்வாங்கப்படவுள்ளதாகவும் இவர்களுக்கு சமையல் செய்யும் அறை பூர்த்தியற்ற ஒரு நிலைமையில் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.
     
    இக்கோரிக்கையை கிழக்கு மாகாண சகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் ஏற்றுக்கொண்டு மாணவர்களுக்காக சமையல் செய்யும் அறையை பூர்த்தி செய்வதற்கு 10 இலட்சம் ரூபா நிதியினை எதிர்வரும் 2016 ஆம் அண்டுக்கான நிதியிலிருந்து நான் வழங்குவேன் என்ற உறுதிமொழியை வழங்கிவைத்தார். 



    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பாலமுனை வைத்தியசாலைக்கு 03 மாடி கட்டிடத்திற்கு கிழக்கு சுகாதார அமைச்சர் நடவடிக்கை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top