• Latest News

    December 22, 2025

    தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நிலையில் இல்லை - பேராசிரியர் நிர்மால் ரன்ஜித் தேவசிறி

    தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நிலை இன்று குறிப்பிட்டுக் கூற கூடிய நல்ல நிலையில் இல்லை என பேராசிரியர் நிர்மால் ரன்ஜித் தேவசிறி தெரிவித்துள்ளார்.

    பேராசிரியர் நிர்மால் தேசிய மக்கள் சக்தி ஆட்சி பீடம் ஏறுவதற்காக பல வழிகளில் பேச்சுவார்த்தை மற்றும் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டவராவார். அரசாங்கத்தின் இன்றைய நிலைமை தொடர்பில் ஊடகங்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்து பேசிய அவர், அரசாங்கம் சில சம்பவங்களில் கோலிக் கூத்தாடுவதாகவே தோன்றுகிறது. 'டிட்வா' சூறாவளியில் ஏற்பட்ட பாதிப்பின் பின்னரான நடவடிக்கை மற்றும் முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல, ரன்ஜன் ஜயலால் போன்றோரின் சம்பவங்கள் அரசாங்கத்தை கோலிக்குள்ளாக்கும் நடவடிக்கையாகவே தோன்றுகிறது.


    அரசாங்கத்தின் அரசியல் செயற்பாடுகள் ஆட்டம் கண்டுள்ளது. இது புரிந்து கொள்ள முடியாத கஷ்டமான காரியமும் அல்ல. இதை இவர்கள் புரிந்து சரிப்படுத்த வேண்டிய காரணங்களாகும். தேசிய மக்கள் சக்தியினர் ஒரு அரசாங்கத்தை நடத்துவதற்கான பரீட்சியம் அற்றவர்கள். இது புதுமைக்கான விடயமும் அல்ல. இவர்களுக்கு ஆட்சி அதிகாரம் கிடைத்தது எதிர்பாராத ஒரு விடயமாகும்.

    இவர்களும் ஆட்சியை பெற்றுக் கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கவில்லை.கடந்த இரண்டு-மூன்று வருடங்களில் இவர்களுக்கு ஆட்சி கிடைக்கும் என அவர்கள் கூட எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். தேசிய மக்கள் சக்தியுள்ள அனைவரும் ஜே.வி.பியின் நீண்ட கால உறுப்பினர் என மக்கள் நினைத்து வாக்களித்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நிலையில் இல்லை - பேராசிரியர் நிர்மால் ரன்ஜித் தேவசிறி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top