• Latest News

    November 30, 2015

    வீதியின் நடுவே அமைக்கப்பட்டுள்ள வடிகான்களில் மூடிகள் சேதம்- சம்மந்தப்பட்ட அரச நிறுவனங்களின் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேண்டுகோள்

    (பழுலுல்லாஹ் பர்ஹான்)
    மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகர சபை பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி அறபுக் கலாசாலை வீதியின் நடுவே அமைக்கப்பட்டுள்ள வடிகான்களில் சில மூடிகள் கடந்த சில மாதங்களாக சேதமடைந்து குன்றும் குழியுமாக காணப்படுவதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

    இதனால் இவ் வீதியில் பயணம் பொது மக்கள்,பாடசாலை மாணவர்கள்,அறபுக் கலாசாலை மாணவர்கள் மிகவும் அவஸ்தைப் படுகின்றனர்.

    தற்போது மழை காலம் என்பதால் இரவு நேரங்களில் இந்த வீதியில் மழை நீர் ஓடும் பொழுது மேற்படி வடிகான்களில் மூடிகள் சேதடைந்து காணப்படுவது தெரியாமல் வீதியில் பயணிப்போர் குறித்த வடிகான் குழியில் விழுவதற்கும்,வீதி விபத்து இடம்பெறுவதற்கும் பெரிதும் வாய்ப்பாக மாறியுள்ளது.

    இது தொடர்பில் சம்மந்தப்பட்ட அரச நிறுவனங்களின் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.




     
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: வீதியின் நடுவே அமைக்கப்பட்டுள்ள வடிகான்களில் மூடிகள் சேதம்- சம்மந்தப்பட்ட அரச நிறுவனங்களின் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேண்டுகோள் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top