கல்முனை கல்வி வலயத்தின் சாய்ந்தமருது கமு/கமு/அல்-ஜலால் வித்தியாலயத்தின் 2015ம் ஆண்டு க.பொ.த (சா/த) பரீட்சை எழுதும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் பொருட்டு நடைமுறைப்படுத்தும் (சா/த) மாணவர் தின விழா பாடசாலையின் அதிபர் எம்.எஸ். நபார் தலைமையில் எதிர்வரும் 2015.12.02 ஆம் திகதி பாடசாலையின் ஆராதனை மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக அதிபர் தெரிவித்தார்.
இவ்விழாவிற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் அல்- ஹாஜ். எம்.ரீ.ஏ. நிஸாம் அவர்களும், கௌரவ அதிதியாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். அப்துல் ஜலீல் அவர்களும், சிறப்பு அதிதிகளாக கல்முனை வலயக் கல்வி அலுவலக திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.எம். முக்தார், சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஐ.எல்.ஏ. றகுமான் ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
மேலும் பாடசாலையின் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

0 comments:
Post a Comment