• Latest News

    November 30, 2015

    'துருனு சிரம சக்தி' திட்டத்தின் கீழ் காத்தான்குடி-தஜ்வீத் வீதி புனரமைப்பு

    (பழுலுல்லாஹ் பர்ஹான்)
    தேசிய கொள்கைத் திட்டமிடல் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கிவரும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 2015 இளைஞர் பாராளுமன்றத்திற்கு இணையாக “துருனு சிரம சக்தி” தேசிய கிராம அபிவிருத்தி வேளைத்திட்டத்தின் கீழ் சுமார் 1 ஒரு இலட்சம் ரூபா செலவில் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி-02 166கிராம சேவகர் பிரிவிலுள்ள தஜ்வீத் கலாசாலை வீதியின் 4ம் குறுக்கு உள்ளக வீதி புனரமைப்பு செய்யப்படவுள்ளது.

    மேற்படி வீதியின் 4ம் குறுக்கு வீதியை புனரமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு 30-11-2015 இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது.

    இதன் போது அதிதிகளினால் காத்தான்குடி தஜ்வீத் கலாசாலை வீதியின் 4ம் குறுக்கு உள்ளக வீதிக்கான அடிக்கல் உத்தியோகபூர்வமாக நட்டி வைக்கப்பட்டது.

    தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் காத்தான்குடி பிரதேச செயலக இளைஞர் சேவை அதிகாரி எம்.எம்.ஸமீலுல் இலாஹி தலைமையில் இடம்பெற்ற இவ் அடிக்கல் நடும் நிகழ்வில் காத்தான்குடி நகர சபையின் செயலாளர் ஜெ.சர்வேஸ்வரன்,காத்தான்குடி பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் ஏ.சீ.அஹமட் அப்கர் ,காத்தான்குடி பிரதேச கிராம சேவகர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் எம்.கோமலேஸ்வரன்,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ரீ.எம்.சில்மி,166 பிரிவுக்கான கிராம சேவை உத்தியோகத்தர் திருமதி. அஸீஸா, காத்தான்குடி பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவர் ஏ.எல்.எம்.நியாஸ் உட்பட அப்பகுதி பொது மக்கள்,இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

     “துருனு சிரம சக்தி” தேசிய கிராம அபிவிருத்தி வேளைத்திட்டத்தின் கீழ் அடிக்கல் நட்டி வைக்கப்பட்ட குறித்த வீதியின் புனரமைப்புப் பணிகள் இன்று தொடக்கம் 15 தினங்களுக்குல் முடிவடைந்து மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: 'துருனு சிரம சக்தி' திட்டத்தின் கீழ் காத்தான்குடி-தஜ்வீத் வீதி புனரமைப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top