• Latest News

    November 30, 2015

    நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் கற்றோரைக் கௌரவிப்போம் நிகழ்வு

     (பழுலுல்லாஹ் பர்ஹான்)
    நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் கிழக்குப் பிராந்திய தலைமைத்துவ சபையின் ஏற்பாட்டில் கற்றோரைக் கௌரவிப்போம் எனும் விஷேட கௌரவிப்பு நிகழ்வு அண்மையில் காத்தான்குடியிலுள்ள நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் மக்கள் அரங்கில்; இடம்பெற்றது.

    இதன்போது அரச துறையின் உயர் பரீட்சையான (எஸ்.எல்.ஏ.எஸ்.) பரீட்சையில் சித்திபெற்ற ரீ.எம்.எம்.அன்ஸார், ஏ.ரீ.எம்.ராபி, திருமதி சில்மியா ஜாபீர் ஆகியோரும் சுகாதாரத் துறையின் உயர் பதவியினைப் பெற்ற வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ_ம்; அதிதிகளினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

    நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் கிழக்குப் பிராந்திய செயலாளர்எம்.ஏ.சீ.எம்.ஜவாஹிர் ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில்; முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் எம்.எம்.அப்துர் ரஹ்மான், முன்னணியின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் சிராஜ் மஹ_ர், அதன் தலைமைத்துவ சபை உறுப்பினர் பொறியியலாளர் எம்.எம்.பளுலுல் ஹக் உட்பட பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் கற்றோரைக் கௌரவிப்போம் நிகழ்வு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top