• Latest News

    November 28, 2015

    சாய்ந்தமருது தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களுக்கான NVQ LEVEL 3, 4 சான்றிதழ்கள் வழங்கும் வைபவம்

    (சப்னி)
    இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் சாய்ந்தமருது தொழிற்பயிற்சி நிலையத்தில் 2014 முதலாம் தொகுதி மாணவர்களுக்கான NVQ LEVEL 3, 4 சான்றிதழ்கள் வழங்கும் வைபவம் 24.11.2015 அன்று தொழிற்பயிற்சி நிலைய பிரதான மண்டபத்தில் நிலையப் பொறுப்பதிகாரியும் தகவல் தொழில் நுட்ப தொடர்பாடல் போதனசிரிருமான ஏ.ஆதீம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

    இந்நிகழ்வுக்கு  பிரதம அதிதியாக சாய்ந்தமருது பிரதே செயலகத்தின் செயலாளர் அல்-ஹஐ் ஏ.எல்.எம்.சலீம் கலந்துகொண்டு சிறப்பித்தார். 

    இங்கு கல்வி கற்ற சுமார் 35 மாணவ, மாணவிகளுக்கான  NVQ Level 3,4 சான்றிதழ்களை மாணவர்கள் பெற்றுக் கொன்டதுடன். இங்கு பிரதம அதிதியாக கலந்துகொண்ட சாய்ந்தமருது பிரதேச செயலாளருக்கு விஷேட கெளவரவமும் வழங்கப்பட்டது

    அத்துடன் இந்நிகழ்வுக்கு சாய்ந்தமருது தொழிற்பயிற்சி நிலைய மின்னியல் போதனசிரியர் ஏ.எல்.இஸ்மத், அம்பாறை மாவட்ட தலைமை தொழிற்பயிற்சி நிலைய  ஆசிரியர் வசீம் மற்றும் மஹ்சூம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். 

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சாய்ந்தமருது தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களுக்கான NVQ LEVEL 3, 4 சான்றிதழ்கள் வழங்கும் வைபவம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top