யு.கே.காலித்தின்:
கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியின் நடப்பாண்டுக்கான பழைய மாணவர்கள் ஒழுங்கு செய்திருந்த கல்லூரியின் எதிர்கால அபிவிருத்திக்கான செயற் திட்டம் எனும் தொனிப்பொருளில் கல்லூரி வளாகத்தில் இடம் பெற்றது
கல்லூரியின் அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கல்லூரியின் பலம், கல்லூரியின் பலவீனம், கல்லூரி எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் கல்லூரியின் அபிவிருத்திற்காக எவ்வாறான சந்தர்ப்பங்களை பயன் படுத்தலாம் எனும் தலைப்புகளில் விரிவாக ஆராயப்பட்டது.
ஆசியா பௌன்டேசன் நிகழ்ச்சி திட்ட ஒருங்கிணைப்பாளர் ரிஷாட் ஷரிபின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற நிகழ்வில் கல்லூரியின் பலய மாணவ சங்கத்தின் பல் துறை சார்ந்த கல்வியாளர்கள், பிரதி அதிபர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினர்.
புதிய ஆண்டுக்கான பழய மாணவர் சங்கத்தின் புதிய நிர்வாகத் தெரிவின் பின்னர் ஏற்பாடு செய்யப்பட்ட முதலாவது நிகழ்வு இது வாகும்.



0 comments:
Post a Comment