• Latest News

    December 01, 2015

    வீதி அபிவிருத்திக்கு பிரதி அமைச்சர் ஹரிஸ் நடவடிக்கை

    (எஸ்.அஷ்ரப்கான்)
    கல்முனை பிரதேச மக்களின் நீண்டகால பிரச்சினையாக இருந்து வந்த வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கான  நடவடிக்கைகளை பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் மேற்கொண்டு வருகின்றார்.
    இதனடிப்படையில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரிஸ் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் கல்முனை காசிம் வீதி காபட் வீதியாகவும், கல்முனை தைக்கா வீதி வடிகான் வசதிகளுடன் கெங்கிரீட் வீதியாகவும் புனரமைக்கப்படவுள்ளது.
    இதன் ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் 04.12.2015 (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 4.00 மணிக்கு காசிம் வீதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும், பிற்பகல் 5.00 மணிக்கு தைக்கா வீதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.
    இந்த நிகழ்வுகளுக்கு பிரதம அதிதியாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரிஸ் அவர்களும், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியளாலர்கள் மற்றும் உயர் அதிகாரிகளும் கலந்து கொள்ள உள்ளனர். இதேவேளை கல்முனை அலியார் விதியினுடைய வேலைகள் ஜனவரியில் ஆரம்பிப்பதற்கு நெடுஞ்சாலைகள் அமைச்சு அனுமதி அளித்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: வீதி அபிவிருத்திக்கு பிரதி அமைச்சர் ஹரிஸ் நடவடிக்கை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top