• Latest News

    December 10, 2015

    வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்திய பின் பாடசாலையில் பிள்ளைகளை சேர்க்கும் திட்டம் வரவுள்ளது: டாக்டர் நக்பர்

    (அபு அலா)
    எதிர்வரும் காலங்களில் மாணவர்களை பாடசாலைகளில் சேர்க்கும்போது அவர்களை வைத்திய பரிசோதனையில் ஈடுபடுத்திய பின்னர்தான் பாடசாலையில் சேர்க்கும் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுவருவதாக அட்டாளைச்சேனை தள ஆயுள்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரும் சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிமின் ஆலோசகருமான டாக்டர் கே.எல்.எம்.நக்பர் தெரிவித்தார்.

    அட்டாளைச்சேனை தள வைத்தியசாலையின் தொற்றாநோய் பிரிவின் பொறுப்பதிகாரி டாக்டர் எம்.பி.எப்.நப்தா தலைமையில் தொற்றா நோய்களுக்கான சிகிச்சையைப் பெறவந்த நோயாளர்களுக்கு தொற்றாநோய் பற்றி விளக்கமளிக்கும் நிகழ்வு இன்று காலை (09) வைத்தியசாலையில் இடம்பெற்றபோது மேற்கண்டவாறு கூறினார்.

    அவர் மேலும் தெரிவிக்கையில்,

    இன்று மிக அதிகமான இளைஞர்கள் கஞ்சா, குடு, மதுபானம், புகையிலை போன்ற போதை வஸ்துக்களை பாவிப்பவர்களாகவும் இவ்வாறான செயற்பாடுகளில் மிக அதிகமான பாடசாலை மாணவர்கள் இதில் ஈடுபட்டும் வருகின்றனர். இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் பாடசாலையில் மாணவர்களை அனுமதிக்கும் முன்னர் அவர்களை வைத்திய பரிசோனையில் ஈடுபடுத்தியதன்பின்னர் பாடசாலையில் அனுமதிக்கலாம் என்ற இத்திட்டத்தை அரசு நடைமுறைக்கு கொண்டுவரவுள்ளது.  

    எயிட்ஸ் மற்றும் புற்றுநோய்கள் மனிதனை இன்று ஆட்டிப்படைக்கின்றதொரு மிகக் கொடிய நோய்களாகும். இந்த நோய்கள் எதனால் வருகின்றது அதற்கான காரணம் என்ன என்பதை நாம் உணர்ந்து செயற்படவேண்டும். அதற்காக நமது அன்றாட வாழ்க்கை முறையையும், உணவு பழக்கத்தையும் ஒரு கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவருதல் அவசியமாகும். இதனை ஒரு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வராதவரை நாம் ஒருபோதும் நேயிலிருந்து விடுபடவே முடியாது.

    சீனி, கொலஸ்ட்ரோல் என்ற நோய் இல்லாதவர்கள் இன்று யாருமில்லை. இந்த நோய்களைப் பற்றி யாருமே கதைப்பதுமில்லை இப்போது நோய்களைப் பற்றி கதைப்பதென்றால் புற்றுநோயையும், எயிட்ஸ் நோயையும் பற்றித்தான் இன்று அதிகளவில் பேசப்பட்டு வருகின்றன. இந்த நோயினால் பாதிக்ப்பட்டவர்களுக்கென மஹரகம வைத்தியசாலையில் குடும்பங்கள் தங்குவதற்காகவேண்டி பல ஏற்பாடுகளையும் வைத்தியசாலை நிருவாகம் செய்துகொடுத்துள்ளது. அந்த கொடிய நோயிலிருந்து நாம் அனைவரும் பாதுகாப்புப்பெற எமது அன்றாட வாழ்க்கை முறையையும், உணவுப் பழக்கத்தையும் இன்றிலிருந்து மாற்றியமைக்க முயலவேண்டும் என்றார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்திய பின் பாடசாலையில் பிள்ளைகளை சேர்க்கும் திட்டம் வரவுள்ளது: டாக்டர் நக்பர் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top