(எம்.எம்.ஜபீர்)
கல்முனை நற்பிட்டிமுனை பிரதேசத்திலுள்ள
அக்பர் நன்னீர் மீனவர் சங்க அங்கத்தவர்களுக்கான ஓய்வறை மற்றும் மீன்பிடி
உபகரணத்தை பாதுகாப்பதற்கான கட்டிடம் என்பவற்றை நிர்மாணித்து தருமாறு பிரதேச
நன்னீர் மீனவர்கள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர்,
நீர்வழங்கல் வடிகாலமைப்பு நகர திட்டமிடல் அமைச்சரின் இணைப்புச் செயலாளர்
ரஹ்மத் மன்சூர் ஆகியோரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதனையடுத்த
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர், நீர்வழங்கல் வடிகாலமைப்பு
நகர திட்டமிடல் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர் ஆகியோர்கள்
அண்மையில் குறித்த இடத்திற்கு விஜயம் செய்து கட்டிடம் அமைக்கப்படவுள்ள
காணியை பார்வையிட்டதுடன், தாங்கள் துரிதமாக கட்டிடத்தை அமைப்பதற்கான
நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக மீனவர்களிடம் தெரிவித்தனர்.
இதன்போது
அக்பர் நன்னீர் மீனவர் சங்கத்தின் தலைவர் எம்.ரீ.நஸீம், செயாலாளர்
எம்.ஜே.நிரோஸ் மற்றும் மீன்பிடி சங்கத்தின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து
கொண்டனர்.


0 comments:
Post a Comment