கே.அஸீம் முஹம்மத்--
அல் இஹ்லாஸ் சர்வதேச இஸ்லாமியப் பாடசாலையின் முன்பள்ளிச் சிறார்களின் வருடாந்த கலைவிழாவும் பரிசளிப்பு நிகழ்வும் அ/கலாவெவ முஸ்லிம் மத்திய கல்லூரி கேட்போர் கூடத்தில் 2015.12.06 ஞாயிறு காலை 9.00 மணிக்கு பாடசாலையின் நிறுவனர் மற்றும் பணிப்பாளர் K.M.பாயிஸ் அவர்களின் தலைமையில் வெகு விமர்சையாக ஆரம்பமானது.
இந்த நிகழ்வில் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார கௌரவ அமைச்சர் சந்திராணி பண்டார அவர்களின் சார்பில் அவரின் செயலாளர் திரு சிரிவர்தன அவர்களும் மாகாண சபை உறுப்பினர் திரு அனுர குனசேகர அவர்களும் கலந்து கொண்டனர். அத்தோடு அநுராதபுர மாவட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் A.R. இஷாக் அவர்களும் மற்றும் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
மண்டபம் நிரம்பி வழிகின்ற கரகோஷத்தோடு 4, 5 வயதுச் சிறார்களின் மேடை நிகழ்ச்சிகள் ஆங்கிலம், சிங்களம், தமிழ், அறபு ஆகிய நான்கு மொழிகளிலும் அரங்கேற்றம் செய்யப்பட்டது. அல் இஹ்லாஸ் பாலர்களின் திறமைகளைக் கண்டுகளித்த அதிதிகள் அவர்களைப் பாராட்டிப் பரிசில்கள் வழங்கி வைத்தனர். அல் இஹ்லாஸ் சிறார்களின் ஆளுமை விருத்திக்கு மிகச் சிறந்த வாய்ப்பாக அமைந்த இந்நிகழ்வு பி.ப. 2.00 மணிக்கு துஆவோடு இனிதே நிறைவுற்றது. அல் ஹம்துலில்லாஹ்.

0 comments:
Post a Comment