• Latest News

    December 11, 2015

    இன்பாசா: விருதுகளை தனதாக்கிய நிந்தவூர் அல் அஷ்றக் மாணவி

    எம்.வை.அமீர் -
    நீண்ட இடைவேளைக்குப் பின்னர் கிழக்குப் இப்பிராந்திய மாணவர்களும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திவரும் இன்றைய காலகட்டத்தில், நிந்தவூர் அல் அஷ்றக் தேசிய பாடசாலையில் பௌதீக விஞ்ஞானதுறையில் கல்வி பயிலும் ஏ.எச். இன்பாசா ஹமீட், பிரதேச மற்றும் தேசிய மட்டங்களில் பல்வேறு சாதனைகளைப் படைத்து அவர் கற்ற பாடசாலைக்கும் அவரது பெற்றோருக்கும் பெருமையை தேடிக்கொடுத்துள்ளார்.
     2015.10.22 ல் சுற்றாடல் முன்னோடிக்கான ஜனாதிபதிப் பதக்கத்தையும் 2015 ம் ஆண்டிற்கான அகில இலங்கை ரீதியில் இடம்பெற்ற பாடசாலை மாணவர்களுக்கிடையேயான இளம் கண்டுபிடிப்பாளர் போட்டியில் தரம் 12> 13 பிரிவில் சக்தி வளமும், சூழல் பாதுகாப்பையும் பேணக்கூடிய வகையிலான சூழலுக்கு நேயமிகு சிக்கன சிரட்டைக்கரி சுடும் நவீன முறையில் அமைக்கப்பட்ட சூளையினை உருவாக்கி சாதனை படைத்தமைக்காக தங்கப்பதக்கத்தையும் பெற்றிருந்தார். இந்நிகழ்வு விஞ்ஞான முன்னேற்ற அமைப்பினது 71வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஸ்ரீ ஜவர்த்தனபுர பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் இடம்பெற்றிருந்தது.

    2011ம் ஆண்டில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கலைப்போட்டியில் மாவட்ட ஓவியருக்கான விருதினையும் பெற்றிருந்ததுடன் சுற்றாடல் முன்னோடிக்கான ஜனாதிபதி விருது பெற்றவர்களில் விசேட விருது பெற்ற 16 மாணவ மாணவிகளில் ஒருவராக தெரிவு செய்யப்பட்ட இன்பாசா, கடந்த நவம்பர் 28ம் திகதி முதல் டிசம்பர் 04ம் திகதி வரை இந்தியா, புதுடெல்லிக்கு கல்விச்சுற்றுலா ஒன்றுக்கு செல்வதற்கான வாய்ப்பைப்பெற்று சென்று வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இன்பாசா: விருதுகளை தனதாக்கிய நிந்தவூர் அல் அஷ்றக் மாணவி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top