• Latest News

    December 13, 2015

    தமிழக மக்களின் இயல்பு வாழ்க்கை சீராகும் வரை சமையல் எரிவாயு மற்றும் மின்சாரத்தை அரசு இலவசமாக வழங்க வேண்டும் : மத்தியஇ மாநில அரசுகளுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் பொதுச்செயலாளர் எம்.முஹம்மது அலி ஜின்னா கோரிக்கை

    தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை சீராகும் வரை சமையல் எரிவாயு  மற்றும் மின்சாரத்தை அரசு இலவசமாக வழங்க வேண்டும் : மத்திய, மாநில  அரசுகளுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச்செயலாளர்  எம்.முஹம்மது அலி ஜின்னா கோரிக்கை
    தமிழகத்தில்  மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் ஆகிய பகுதிகளை பார்வையிட வருகைபுரிந்த  பாப்புலர் ஃப்ரண்ட்  ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச் செயலாளர் எம்.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :
    தேசிய அளவில் அஸ்ஸாம், உத்தரகாண்ட், காஷ்மீர்  போன்ற மாநிலங்களில் வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட  பேரழிவின் போதும், தமிழகத்தில்  சுனாமி மற்றும் திருப்பூர் வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட பேரழிவின் போதும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில்  முழுவீச்சில் களப்பணியாற்றிய  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயல்வீரர்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் துவக்க நாள் முதலே மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் 4500 செயல்வீரர்கள் சுழற்சி முறையில் 500க்கும் மேற்பட்ட இடங்களில் மீட்பு , நிவாரணம், புணர் நிர்மாணம் என  மூன்று கட்டங்களாக தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் உள்ள  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயல்வீரர்கள் முழுவீச்சுடன் நிவாரண நிதி மற்றும் பொருட்களை திரட்டி அனுப்பி வருகின்றனர்.
    இதுவரை நமது செயல்வீரர்களால்  5000 க்கும் மேற்பட்ட  மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.  1,22,94,155 ரூபாய்க்கு நிகரான பொருட்கள் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2,16,157 நபர்கள் பயனடைந்துள்ளனர். தொடர்ந்து நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
    தற்பொழுது பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ முகாம்கள் மற்றும் கணக்கெடுக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளன. இதுவரை நடைபெற்ற 20 மருத்துவ முகாம்கள் வாயிலாக  8000 க்கும் மேற்பட்ட நபர்கள் பயனடைந்துள்ளனர். பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் கணக்கெடுக்கும் பணி முடிவடைந்துள்ளது. இதனை அடிப்படையாக கொண்டு புணர் நிர்மாண பணிகள் செய்ய திட்டமிட்டுள்ளோம்.
    மேலும் மத்திய அரசு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு அறிவித்துள்ள 1940 கோடிக்கு பதிலாக பாதிப்புகள் பல்லாயிரம் கோடிகளை தாண்டும் என்பதை மனதில் கொண்டு ஆரம்பகட்ட நிவாரண நிதியாக பத்தாயிரம் கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை சீராகும் வரை சமையல் எரிவாயுவை மூன்று மாதங்களுக்கு இலவசமாக வழங்கிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
     அதே போல் தமிழக  அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரண்டு மாதங்கள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்; பேருந்துகளில் இலவசமாக பயணிக்கும் அறிவிப்பை கூடுதலாக ஒரு வாரத்திற்கு நீட்டிக்க வேண்டும்; மாணவர்களின் மன உளைச்சலை கருத்தில் கொண்டு பன்னிரெண்டாம் வகுப்புவரை பொதுத்தேர்வை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் ; பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு அறிவித்துள்ள நிவாரண நிதி போதுமானதாக இல்லாததால் மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பக் கூடிய வகையில் கூடுதலான நிவாரண தொகையை அறிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
    பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை உரிய வகையில் சேர்க்கும் முகமாக ஏற்கனவே தொண்டாற்றி வரும் அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் அடங்கிய ஒருங்கிணைந்த குழுவை உருவாக்கி ஒன்றிணைத்து செயல்பட வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொண்டார். பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்கக் கூடிய அரசின் அனைத்து விதமான பணிகளை வரவேற்பதோடு இந்த மகத்தான பணியில்   பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா எப்போதும் துணை நிற்கும் என்றும் தெரிவித்தார்.   

    இப்படிக்கு
    மு. அப்துல் ரசாக்
    மக்கள் தொடர்பு ஒருங்கிணைப்பாளர்
    பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
    தமிழ்நாடு.





    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தமிழக மக்களின் இயல்பு வாழ்க்கை சீராகும் வரை சமையல் எரிவாயு மற்றும் மின்சாரத்தை அரசு இலவசமாக வழங்க வேண்டும் : மத்தியஇ மாநில அரசுகளுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் பொதுச்செயலாளர் எம்.முஹம்மது அலி ஜின்னா கோரிக்கை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top