• Latest News

    December 10, 2015

    உத்தியோகத்தர்கள் விட்டுக் கொடுப்புடன் செயற்பட வேண்டும்: மாகாண சுகாதார அமைச்சர் நசீர்

    அபு அலா –
    ஒருவொருக்கொருவர் விட்டுக்கொடுத்து ஒரு புரிந்துணர்வோடு செயற்பட்டால்தான் அமைச்சரின் வேலைகளையும், அமைச்சரின் காரியாலய அன்றாட கடமைகளையும் மிக திறன்பட முன்னெடுத்துச் செல்லலாம் என்று கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் கூறினார்.
    சுகாதார அமைச்சரின் நிருவாக உத்தியோகத்தர்களுக்கான கூட்டம் நேற்று புதன்கிழமை மாலை (09) திருகோணமலை சுகாதார அமைச்சில் இடம்பெற்றபோது சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் மேற்கண்டவாறு கூறினார்.
    அவர் மேலும் கூறுகையில்,
    யார் எதைச் செய்தாலும் ஒரு விட்டுக்கொடுப்புத் தன்மை அங்கு இருக்கவேண்டும். விட்டுக்கொடுப்புத்தன்மையில்லை என்றால் அங்கு எந்த வேலைகளும் சரிவர இடம்பெறாது. ஒரே சன்டை ச்சசரவுகள்தான் இடம்பெறும். ஒரு நிருவாகத்தில் மிக அதிகமான பிரச்சினைகள் வருவதற்குக் காரணம் விட்டுக்கொடுப்புத் தன்மையில்லை, புரிந்துணர்வுத் தன்மையில்லை என்றுதான் என்னால் சொல்லமுடியும்.
    இதற்கெற்றாப்போல் உங்களின் கடமைகள் அமையவேண்டும். அமைச்சரின் ஒரு வேலையை செய்யும்படி ஒரு அதிகாரி பணித்தால் குறித்த வேலையை முதலில் செய்துவிடுங்கள். அதைவிட்டு விட்டு இந்த வேலையைச்செய்ய எனக்கு மட்டும்தான் கடமையா? இதை அவர் செய்யட்டும், இவர் செய்யட்டும் என்று யாரும் இருக்கக்கூடாது. இது அவருடைய கடமை இதை அவர்மட்டும்தான் செய்யவேண்டும் என்றும் இருக்கக்கூடாது.
    அதிகாரிகளினால் பணிக்கப்படுகின்ற எந்த வேலையாக இருந்தாலும் குறித்த வேலையை முதலில் செய்துவிடுங்கள். அதன் பின்னர் என்னிடம் நேரடியாக வந்து குறித்த விடயங்களை தெரிவித்து அதற்கான தீர்வினையும் பெற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் என்னைச் சந்திக்க யாரிடமும் அனுமதி பெற்றுவரவேண்டிய அவசியமும் இல்லை. இதற்கமைவாக தங்களின் கடமைகளை ஒவ்வொருவரும் முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்றார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: உத்தியோகத்தர்கள் விட்டுக் கொடுப்புடன் செயற்பட வேண்டும்: மாகாண சுகாதார அமைச்சர் நசீர் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top