• Latest News

    December 01, 2015

    பொத்துவிலுக்கு தனியான கல்வி வலயம் வேண்டும்: முதலமைச்சரிடம் கோரிக்கை

    அபு அலா –
    பொத்துவில் உபகல்வி வலையத்தை அதிகாரமுள்ள ஒரு தனி கல்வி வலையமாக தரமுயர்த்த நடவடிக்கை எடுக்கக்கோரிய கலந்துரையாடல் நேற்று (30) கிழக்கு மாகாண முதலமைச்சர் காரியாலயத்தில் இடம்பெற்றது.
    பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.எஸ்.எம்.வாசித் தலைமையில் வருகை தந்த குழுவினருக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் இஸட்.ஏ.அகமட் நஸீர் மற்றும் சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் ஆகியோர்களுக்குமிடையே இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

    இக்கலந்துரையாடலில்,

    பொத்துவில் பிரதேசத்தில் கடந்த ஆண்டு திறந்து வைக்கப்பட்ட உபகல்வி வலையம் அதிகாரமற்ற ஒரு வலயமாகக் காணப்படுகின்றது. இது பெயரளவில் மட்டும்தான் இயங்குகின்றதே தவிர எந்த நடவடிக்கைகளும் அங்கு இடம்பெறுவதில்லை. அங்கு எந்த வேலைகளையும் மேற்கொள்ள முடியாத ஒரு துர்பாக்கிய நிலைமையில்தான் உள்ளது எனவும் சுட்டிக்காட்டி பொத்துவில் மக்களுக்கென்று ஒரு அதிகாரமுள்ள தனி கல்வி வலயத்தை உறுவாக்கித்தரவேண்டும் என்றார்.

    அத்துடன், அம்பாறை மாவட்டத்தின் ஒரு தூர பிரதேசத்தில் அமைந்து காணப்படும் ஒரு பிரதேசம்தான் பொத்துவிலாகும். அங்குள்ள பாடசாலைகளில் கல்வி கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களும், புதிதாக கடமையாற்ற வருகின்ற ஆசிரியர்களும் எங்கள் பிரதேசத்துக்கு கடமையாற்ற வருவதற்கு வர மறுக்கின்றனர்கள். இதனை யாரும் கண்டுகொள்ளாமல் இருப்பதை என்னி பெற்றோர்கள் கவலையடைகின்றார்கள். அதற்கான நடவடிக்கையினையும் மேற்கொள்ளவேண்டும் என்ற கோரிக்கையை பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.எஸ்.எம்.வாசித் முன்வைத்தார்.

    இதற்கு முதலமைச்சர் பதிலலிக்கையில்,

    பொத்துவில் பிரதேசத்திலுள்ள குறைபாடுகள் பற்றி நானும் அறிவேன். அதைவிட சுகாதார அமைச்சர் நஸீர் அறிவார். உங்கள் பிரச்சினை தொடர்பில் கல்வி அமைச்சருடனும், செயலாளர் மற்றும் அது தொடர்பான அதிகாரிகளுடன் கலந்துரையாடி இதற்கான முடிவுகளை ஜனவரி மாதம் பாடசாலை ஆரம்பிக்க முதல் ஆசிரியர்களின் பற்றாக்குறையினை நிவர்த்திசெய்ய நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

    அத்தடன் பொத்துவிலுக்கு அதிகாரமுள்ள தனி கல்வி வலயம் ஒன்று அமைப்பதற்காக அமைச்சரவைப் பத்திரம் ஒன்று தயாரித்து எதிர்வரும் அமைச்சரவைக் கூட்டத்தில் அப்பத்திரத்தை சமர்ப்பித்து ஒரு தீர்க்கமான முடிவை எடுத்துத்தருவேன் எனவும் உறுதிமொழி வழங்கினார்.

     
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பொத்துவிலுக்கு தனியான கல்வி வலயம் வேண்டும்: முதலமைச்சரிடம் கோரிக்கை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top