முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் சீர்திருத்தங்கள் பல கொண்டுவரப்படவுள்ளதாக அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் மக்கள் நலன்களை அடிப்படையாக கொண்டிராதமை குறித்து அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் கவனத்துக்கு எடுத்துக் கூறப்பட்டதைத் தொடர்ந்து இந்த மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றன.
மூன்றாவது வாசிப்பின் போது இந்த மாற்றங்கள் முன்வைக்கப்படவுள்ளன. குறித்த வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட விரும்புகின்ற பிரேரணைகளை அடுத்துவரும் நாட்களில் ஒப்படைக்குமறு பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

0 comments:
Post a Comment