• Latest News

    July 26, 2016

    தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு 2500 ரூபா சம்­பள அதி­க­ரிப்­பினை இரண்டு மாதங்­க­ளுக்­கான நிலு­வை­யுடன் உட­ன­டி­யாக வழங்­கு­வ­தற்கு முத­லா­ளி­மார் சம்­மே­ளனம் இணக்கம்

    தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு இடைக்­கால நிவா­ர­ண­மாக வழங்­கு­வ­தற்கு ஏற்­பாடு செய்­யப்­பட்ட 2500 ரூபா சம்­பள அதி­க­ரிப்­பினை இரண்டு மாதங்­க­ளுக்­கான நிலு­வை­யுடன் உட­ன­டி­யாக வழங்­கு­வ­தற்கு முத­லா­ளி­மார் சம்­மே­ளனம் இணக்கம் தெரி­வித்­துள்­ளது. பெருந்­தோட்ட முத­லா­ளிமார் சம்­மே­ள­னத்தின் பிர­தி­நி­தி­க­ளுக்கும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கும் இடையில நேற்று நடை­பெற்ற விசேட சந்­திப்­பின்­போதே முத­லா­ளிமார் சம்­மே­ளனம் இவ்­வாறு இணக்­கப்­பாட்­டுக்கு வந்­துள்­ளது.

    பெருந்­தோட்ட நிறு­வ­னங்கள் இவ்­வாறு 2500 ரூபா சம்­பள அதி­க­ரிப்பை வழங்­கு­வ­தற்­கான நிதி உத­வியை நிதி­ய­மைச்சு அரச வங்­கிகள் ஊடாக வழங்க முன்­வந்­துள்­ளது. இலங்கை தேயிலை சபையும் பெருந்­தோட்ட நிறு­வ­னங்­களும் செய்­து­கொள்­ள­வுள்ள உடன்­ப­டிக்­கைக்கு அமை­வாக இவ்­வாறு நிதி உதவி வழங்­கப்­ப­ட­வுள்­ளது. இன்­றைய தினம் இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி என்­பன பெருந்­தோட்ட நிறு­வ­னங்­க­ளுக்கு இவ்­வாறு நிதி உத­வியை வழங்­க­வுள்­ளன.

    இந்த நிலை­யி­லேயே பிர­த­ம­ரு­ட­னான சந்­திப்­பின்­போது இவ்­வாறு 2500 ரூபா இடைக்­கால கொடுப்­ப­னவை வழங்க முத­லா­ளிமார் சம்­மே­ளனம் இணக்கம் வெளி­யிட்­டுள்­ளது.

    அதா­வது கூட்டு ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­படும் வரை பெருந்­தோட்ட தொழி­லா­ளர்­க­ளுக்கு தனியார் துறை­யி­ன­ருக்கு வழங்­கு­வ­தற்கு பரிந்­து­ரைக்­கப்­பட்ட 2500 ரூபா சம்­பள உயர்வை வழங்­கு­மாறு அர­சாங்கம் பெருந்­தோட்ட நிறு­வ­னங்­க­ளுக்கு வழங்க பணித்­தது. அத்­துடன் மே மாதம் கூட்டு ஒப்­பந்­தம்­கைச்­சாத்­தி­டப்­படும் என எதிர்­பார்க்­கப்­பட்ட நிலையில் மார்ச்,ஏப்ரல் ஆகிய இரண்டு மாதங்­க­ளுக்கு இவ்­வாறு 2500 ரூபாவை இடைக்­கால அதி­க­ரிப்­பாக வழங்க பரிந்­துரை செய்­யப்­பட்­டது.

    ஆனால் மே மாதம் கூட்டு ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­ப­ட­வில்லை என்­ப­துடன் 2 மாதங்­க­ளாக 2500 ரூபா கொடுப்­ப­னவும் வழங்­கப்­ப­ட­வி்­லலை. இந்­நி­லை­யி­லேயே தற்­போது குறித்த இரண்டு மாதங்­க­ளுக்­கான நிலுவைப் பணத்­துடன் சம்­பள அதிகரிப்பை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    இந்த சந்திப்பில் அமை்சர்களான மலிக் சமரவிக்ரம நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர். எச்.எஸ் சமரதுங்க பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு 2500 ரூபா சம்­பள அதி­க­ரிப்­பினை இரண்டு மாதங்­க­ளுக்­கான நிலு­வை­யுடன் உட­ன­டி­யாக வழங்­கு­வ­தற்கு முத­லா­ளி­மார் சம்­மே­ளனம் இணக்கம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top