• Latest News

    July 22, 2025

    இஸ்ரேலிய படையினர் தனது பணியாளர்களை ஆடைகளை களைந்து சோதனையிட்டதுடன் கைது செய்துள்ளனர் - உலக சுகாதார ஸ்தாபனம் குற்றம்சாட்டியுள்ளது.


    இஸ்ரேலிய படையினர் தனது பணியாளர்களை ஆடைகளை களைந்து  சோதனையிட்டதுடன் கைது செய்துள்ளனர் என உலக சுகாதார ஸ்தாபனம் குற்றம்சாட்டியுள்ளது.

    இஸ்ரேல் தனது பண்டகசாலை மீது விமானதாக்குதலை மேற்கொண்டது என தெரிவித்துள்ள உலக சுகாதார ஸ்தாபனம் தனது பணியாளர்களின் வீடுகளையும் இலக்குவைத்தது இதனால் பெரும் சேதமேற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளது.

    பெண்களும் குழந்தைகளும் மோதல்இடம்பெறும் பகுதியை நோக்கி கால்நடையாக வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டார்கள் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

    டெய்ர் அல்பலாவில் இஸ்ரேல் மேற்கொண்ட உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆண்பணியாளர்கள் அவர்களது குடும்பத்தவர்களை கைதுசெய்து அவர்களிற்கு கைவிலங்கிட்ட இஸ்ரேலிய படையினர் அந்த இடத்தில் வைத்தே அவர்களது ஆடைகளைந்து விசாரணை செய்தனர் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

    இதேவேளை இது குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளதாவதுகாசாவின் நடுப்பகுதியில் உள்ள டெய்ர் அல் பலாவில்உலக சுகாதார ஸ்தாபன ஊழியர்கள் தங்கியிருந்த கட்டிடத்தின் மீதான தாக்குதல்கள்இ அங்கு தங்கியிருந்தவர்களை தவறாக நடத்துதல் மற்றும் அதன் முக்கிய  பண்டகசாலைஅழிக்கப்பட்டதை றுர்ழு வன்மையாகக் கண்டிக்கிறது

    இஸ்ரேலிய இராணுவத்தால் வெளியிடப்பட்ட சமீபத்திய வெளியேற்ற உத்தரவுக்குப் பிறகு டெய்ர் அல் பலாவில் அதிகரித்த மோதலை தொடர்ந்து உலக சுகாதார ஸ்தாபன ஊழியர்களின் வீடு  மூன்று முறை தாக்கப்பட்டது. வான்வழித் தாக்குதல்கள் தீ மற்றும் குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தியதால் குழந்தைகள் உட்பட ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் கடுமையான ஆபத்தில் இருந்தனர் மற்றும் அதிர்ச்சியடைந்தனர்.

    இஸ்ரேலிய இராணுவம் வளாகத்திற்குள் நுழைந்து தீவிர மோதல்களுக்கு மத்தியில் பெண்களையும் குழந்தைகளையும் அல்-மவாசி நோக்கி கால்நடையாக வெளியேற கட்டாயப்படுத்தியது.

     ஆண் ஊழியர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கைவிலங்கு போடப்பட்டு ஆடைகளை அவிழ்த்து சம்பவ இடத்திலேயே விசாரித்து துப்பாக்கி முனையில் சோதனை செய்யப்பட்டனர். இரண்டு ஊழியர்கள் மற்றும் இரண்டு குடும்ப உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். மூன்று பேர் பின்னர் விடுவிக்கப்பட்டனர் அதே நேரத்தில் ஒரு ஊழியர் இன்னும் காவலில் வைக்கப்பட்டுள்ளார்

    Next
    This is the most recent post.
    Older Post
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இஸ்ரேலிய படையினர் தனது பணியாளர்களை ஆடைகளை களைந்து சோதனையிட்டதுடன் கைது செய்துள்ளனர் - உலக சுகாதார ஸ்தாபனம் குற்றம்சாட்டியுள்ளது. Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top