
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் வருடாந்த மாநாடும் புதிய நிர்வாகிகள் தெரிவும் கண்டி லைன் பள்ளிவாசலில் நடைபெற்றது. இரகசிய வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்ட 25 நிர்வாக சபை உறுப்பினர்களினால் இரகசிய வாக்கெடுப்பின் மூலமே தலைவராக ரிஸ்வி முப்தி தெரிவு செய்யப்பட்டார்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவராக எதிர்வரும் மூன்றாண்டு காலத்துக்கு மீண்டும் தெரிவாகியுள்ள ரிஸ்வி முப்தி 'விடிவெள்ளி'க்கு விஷேட பேட்டியொன்றினை வழங்கினார்.
இந்தப் போட்டியின் போதே அவர் மேற்குறிப்பிட்டவாறு முஸ்லிம் சமூகத்துக்கு வேண்டுகோள் விடுத்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவித்ததாவது 'பல்லின சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் ஏனைய சமூகங்களின் உணர்வுகளையும் மதித்து எமது உரிமைகளைப் பாதுகாத்துக் கொண்டு கௌரவமாக வாழ வேண்டும். திடீரென ஏற்படும் உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டுவிடாது நிதானமாக சிந்தித்துச் செயற்பட வேண்டும்.
நான் எமது மக்களிடம் மிகவும் அன்பாக மேலும் ஒரு கோரிக்கையையும் முன்வைக்கிறேன். உலமாக்கள் சமுதாயத்தை வழி நடத்துபவர்கள். நல்வழியைப் போதிப்பவர்கள். நீங்கள் உலமாக்களை நேசியுங்கள்.
அவர்கள் மீது அன்பு வையுங்கள். அவர்களும் மனிதர்கள்தான். மன்னிக்கப்படக்கூடிய மனித தவறுகள் அவர்கள் செய்திருந்தால் அவற்றை மன்னியுங்கள். சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு உலமாக்களுக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள்.
ஜம்இய்யாவில் 15 பிரிவுகள் உள்ளன. இந்த 15 பிரிவுகளான கதவுகளினூடாக உங்களுக்கு விருப்பமான விடயங்களில் இணைந்து சமூகத்துக்குச் சேவை செய்யுங்கள்.
நான் உலமாக்களுக்கும் நாட்டின் அரசாங்கத்துக்கும் துறைசார் நிபுணர்களுக்கும் கல்வியியலாளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தூதுவிடுக்கிறேன். இந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன்.
நாம் நாட்டில் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவோம். சகவாழ்வுக்கு வழிசமைப்போம். எமது தாய் நாட்டைக் கட்டியெழுப்புவோம் என்றார்.
0 comments:
Post a Comment