
பொது எதிரணியுடன் ஒட்டிக்கொண்டு அரசியல் தஞ்சம் கோரி நிற்கும் இவர்கள் அனைவரும் முன்னைய அரசாங்கத்தில் பாரிய ஊழல் மோசடிகளை செய்தவர்கள்.
இவர்கள் செய்த அனைத்து குற்றங்களுக்கும் விரைவில் தண்டனை வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பொது எதிரணியின் பாதயாத்திரை அரசாங்கத்திற்கு சவாலாக அமைந்துள்ளதாக விமர்சித்து வரும் நிலையில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,
கடந்த பத்து ஆண்டுகளில் மக்கள் எதிர்பார்த்த எந்தவித நல்ல நகர்வுகளும் நாட்டில் நடைபெறாத காரணத்தினாலேயே கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினர்.
இன்று நல்லாட்சி அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
எனினும் இப்போது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை குழப்பி மீண்டும் நாட்டில் முரண்பாடுகளை ஏற்படுத்த மஹிந்த ராஜபக் ஷவும் அவரது கூட்டணியினரும் முயற்சித்து வருகின்றனர்.
பாதயாத்திரை செல்வதாலோ அல்லது பொது எதிரணியினரை அழைத்து கருத்து தெரிவிப்பதாலோ ஆட்சியை கவிழ்த்து மீண்டும் ஆட்சியை கைப்பற்றலாம் என மஹிந்தவும் அவரது புதல்வர்களும் அவர்களை சுற்றியுள்ள கூட்டணியும் கனவு காண்கின்றனர். ஆனால் இவர்கள் பாதயாத்திரை சென்று எந்தப் பயனும் கிடைக்கப்போவதில்லை.
ஐந்து ஆண்டுகளுக்கு தேசிய அரசாங்கத்தை மஹிந்த குழுவினால் அசைக்க முடியாது.
மக்கள் இன்றும் ராஜபக் ஷக்களின் கதைகளை நம்புவதாக இல்லை.
மக்கள் தமது வாழ்வாதார அபிவிருத்திகளையும் அமைதியையும் விரும்புகின்றனர். கற்ற சமூகம் ஒன்றை நாட்டில் உருவாக்கி அதன் மூலம் நாட்டை அபிவிருத்தி பாதையில் கொண்டுசெல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளனர்.
ஆகவே மக்களுக்கு இன்று இனவாத செயற்பாடுகளுக்கு செவிசாய்க்க விருப்பம் இல்லாது போயுள்ளது. யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த போதிலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு ஒன்றை பெற்றுக்கொடுக்க முடியாது போய்விட்டது.
எனினும் நல்லாட்சி அரசாங்கத்தில் நாம் சகல மக்களுக்குமான நலன்களை கருத்தில் கொண்டு செயற்படுகின்றோம்.இன்று மக்களுக்கு உண்மைகளும் நாட்டின் போக்கும் நன்றாக தெரிந்துள்ளது.
மேலும் இன்று என்மீது பொய்யான குற்றச்சாட்டுகள் முன்வைத்து எம்மீதும் ஊழல் சாயம் பூசுகின்றனர்.
நிலக்கரி ஊழல், நிதி அமைச்சில் ஊழல், மத்தியவங்கி ஊழல் என இல்லாத கதைகளை கூறி எம்மையும் குற்றவாளிகளாக்கப் பார்க்கின்றனர்.
ஆனால் எம்மீது குற்றம் சுமத்தும் அளவிற்கு இவர்கள் சுற்றவாளிகள் அல்லர். இன்று பொது எதிரணியுடன் ஒட்டிக்கொண்டு அரசியல் தஞ்சம் கோரி நிற்கும் இவர்கள் அனைவரும் முன்னைய அரசாங்கத்தில் பாரிய ஊழல் மோசடிகளை செய்தவர்கள்.
இவர்கள் செய்த அனைத்து குற்றங்களுக்கும் விரைவில் தண்டனை வழங்கப்படும். சட்ட நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இன்னும் சிறிது காலம் மட்டுமே இவர்களின் இனவாத கோசங்கள் அனைத்தும் எடுபடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment