• Latest News

    July 27, 2016

    சுவாதியின் உண்மையான அப்பா இவர் இல்லை! புதிய மர்மம்

    “என் பொண்ணை அநியாயமா கொன்னுட்டானுங்களே”ன்னு, சுவாதியின் குருதி உறைந்து போவதற்குள், சிதைக்கப்பட்ட அவளது உடலை பார்த்து கதறிய சந்தான கோபாலகிருஷ்ணன் தான் சுவாதியின் அப்பா என்பதை இந்த உலகம் நம்பியது. ஆனால் அதேநாளில் ‘சுவாதியின் சொந்த அப்பா அவரில்லை’ என்பது காவல்துறையினருக்கு தெரிந்தே இருந்தது.
    ராம்குமாரை சிறையில் அடையாளம் காட்ட சென்றபோதும் அதே அப்பா, “எம் பொண்ண ஏன் கொன்னே”ன்னு கதறியபோதும் ‘சுவாதியின் அப்பா இவரில்லை’ என்று சொல்ல காவல்துறையினருக்கு வாய் வரவில்லை.
    “பொண்ணு பொணமா கிடக்கிறா. இந்தாளு ஏன் பாக்கெட்டுல கையவிட்டுக்கிட்டு நிக்குது? அவளுடைய சித்தப்பாவோ வளைஞ்சு குனிஞ்சி செல்போன்ல போட்டோ எடுத்து யாருக்கோ அனுப்புது?” என்று சில விமர்சனங்கள் பொதுத்தளத்தில் வந்தபோதும் அந்த வார்த்தைகளில் எனக்கு அதிருப்தி இருந்தது.
    ஆனால், ஒரு குழுவின் தீவிர முயற்சியால் கண்டுபிடிக்கப்படும் சுவாதியின் பின்னணிகள், நாம் நம்பிக்கொண்டிருக்கும் தகவல்களை நொறுக்கிவிடுகிறது. ‘இதுதான்டா உண்மை’ என்று நம்மால் கற்பனைகூட செய்ய முடியாத உண்மைகளை வீசியெறியும்போது, ‘சுவாதியின் அப்பா’ என அடையாளப்படுத்தப்பட்டவர், சம்பவம் ந்டைபெற்ற அன்று அவருடைய உடல்மொழிகளால் எவ்வாறு விமர்சிக்கப்பட்டாரோ அந்த கூலான காட்சிக்குப் பின்னே என்ன பின்னணி இருந்திருக்கக் கூடும் என்று மீண்டும் சிந்திக்க வைத்துவிடுகிறது.
    சந்தான கோபலகிருஷ்ணனின் முதல் மனைவியின் தங்கை ரங்கநாயகி என்பவர் தான் சுவாதியின் அம்மா. இவருக்கும் வேறொருக்கும் (கணவர்) பிறந்தவர் சுவாதி. குழந்தைகளையும் மனைவியையும் விட்டுவிட்டு கணவர் ஓடிப்போன நிலையில், மனைவியின் தங்கையையும் சந்தான கோபலகிருஷ்ணன் வைத்துக் கொண்டார்.
    பெங்களூரில் சுவாதி முஸ்லிம் இளைஞனை திருமணம் செய்து கொண்டதோடு, இஸ்லாம் மதத்திற்கும் மாறிவிட்டார். இது பார்ப்பனரான சந்தான கோபாலகிருஷ்ணனுக்கு அதிருப்தி அளித்ததன் விளைவு….
    என்ன நடந்திருக்கக்கூடும் என்பதை நம்மால் உணர்ந்திருக்க முடியும். இந்த ஆர்எஸ்எஸ் – இந்துத்துவ வெறி ஆட்டத்தில் மாட்டிக்கொண்டவர் தான் அப்பாவி ரவிகுமார்.
    இந்த சுவாதியின் வழக்கு விசாரணை உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்குமோ இல்லையோ, அரசியல் அதிகார பலத்தால் யார் குற்றவாளி என்று தெரிந்தும் அதை மூடிமறைத்துவிட்டு தொடர்ந்து ராம்குமார்தான் குற்றவாளி என நிருபிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கும் தமிழக காவல்துறையினரிடம் இருந்து ராம்குமாரை மீட்க வேண்டிய கடமை இந்த சமூகத்திற்கு இருக்கிறது.
    ‘பூனைக்கு யார் மணி கட்டுவது’ என்பதல்ல வாதம். வாய்மைக்கு இன்னமும் மதிப்பிருக்கிறதா என்பதைதான் இந்த வழக்கு வெளிப்படுத்த வேண்டும்.
    காவல்துறையினர் எவ்வளவுதான் முட்டிமோதி பொய் சாட்சிகளை உருவாக்கினாலும், சுவாதியின் குடும்ப பின்னணிக் கதைகள் காவல்துறையினருக்கு நெருக்கடிக்கு மேல் நெருக்கடியை ஏற்படுத்தும்! ஆணவக் கொலைகள் ஒருதலைக் காதலாக இருக்க முடியாது இருக்கவும் இருக்காது!
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சுவாதியின் உண்மையான அப்பா இவர் இல்லை! புதிய மர்மம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top