• Latest News

    August 31, 2016

    உள்ளூராட்சி எல்லை நிர்ணய முறைப்பாடுகள் ஒக்டோபர் 31க்கு முன்னர் விசாரணை நடத்த வேண்டும்.

    எல்லை நிர்­ணய முறைப்­பா­டுகள் எதிர்வரும் ஒக்­டோபர் மாதம் 31 ஆம் திக­திக்கு முன் விசா­ரிக்­கப்­பட்டு உரிய நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட வேண்­டு­மென மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைசர் முஸ்­தபா எல்லை நிர்­ணய முறைப்­பா­டு­களை ஆராயும் குழுவின் தலைவர் அசோக பீரி­ஸுக்கு உத்­த­ரவு பிறப்­பித்­துள்ளார்.

    எல்லை நிர்­ணய முறை­ப்பா­டு­களை ஆராயும் குழு தனது கட­மை­யினை நிறைவு செய்­வ­தற்கு கால அவ­காசம் கோரியி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. எல்லை நிர்­ணய முறை­ப்பா­டு­களில் 90 வீத­மா­னவை விசா­ரிக்­கப்­பட்டு பூர்த்தி செய்­யப்­பட்­டுள்­ளன. அவை பட வரை­புக்­காக நில அளவைத் திணைக்­க­ளத்­திடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளன.
    கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் வர்த்­த­மானி அறி­வித்­தலில் வெளி­யி­டப்­பட்ட எல்லை நிர்­ணய அறிக்­கையில் தவ­றுகள் இருப்பின் அது தொடர்பில் முறைப்­பா­டு­களைச் சமர்ப்­பிக்­கும்­படி அர­சாங்கம் கோரி­யது.

    இதற்­கி­ணங்க அர­சியல் கட்­சிகள், சிவில் அமைப்­புகள் மற்றும் பொது­மக்கள் சுமார் 2000 முறை­பா­டு­களை முன்­வைத்­தனர். இந்த முறை­பா­டு­களை ஆராய்ந்து எல்­லை­களை மீள் நிர்­ணயம் செய்­வ­தற்­கா­கவே மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் அனைத்து அர­சியல் கட்­சி­களின் பிர­தி­நி­தி­க­ளையும் உள்­ள­டக்கி குழு­வொன்­றினை நிய­மித்தார்.
    இக்குழுவிற்கே தனது அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்கு எதிர்வரும் அக்டோபர் மாதம் 31 ஆம் திகதி வரைகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: உள்ளூராட்சி எல்லை நிர்ணய முறைப்பாடுகள் ஒக்டோபர் 31க்கு முன்னர் விசாரணை நடத்த வேண்டும். Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top