
கொலை வழக்கே மர்மாக இருந்து வந்த நிலையில், தற்போது ராம்குமாரின் மரணமும் சேர்ந்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
சுவாதி கொலை வழக்கில் ஆரம்ப நாட்கள் முதல் தற்போது வரை நடந்த சம்பவங்கள் இதோ,
ஜூன் 24 ஆம் திகதி
மென்பொறியாளர்
சுவாதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் காலை 6. 40 மணியளவில் அடையாளம்
தெரியாத ஒரு நபரால் கொலை செய்யப்பட்டார். சென்னையில், அதுவும் மக்கள்
அதிகம் கூடும் ஒரு பகுதியில் நிகழ்ந்த இந்த கொலை, தமிழகத்தையே
அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ஜூன் 27 ஆம் திகதி
இந்த கொலை
வழக்கு, ரயில்வே காவல்துறையிடமிருந்து, நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு
மாற்றப்பட்டது. அதே நாளில், ஒரு சிசிடிவி வீடியோவை, காவல்துறை
வெளியிட்டது.
ஜூலை 1 ஆம் திகதி
திருநெல்வேலி மாவட்டம்
மீனாட்சிபுரத்தில் ராம்குமார் (22) என்ற இளைஞனை, சுவாதி வழக்கு தொடர்பாக
காவலர்கள் கைது செய்தனர். அப்போது, தற்கொலை செய்து கொள்வதற்காக ராம்குமார்
தன் கழுத்தை அறுத்து தற்கொலை செய்துக் கொள்ள முயன்றதாக பொலிசார் கூறினர்.
உடனடியாக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
ஜூலை 4 ஆம் திகதி
அதிகாலை
3 மணி அளவில் பலத்த பாதுகாப்புடன் ராம்குமார் சென்னைக்கு 108 ஆம்புலன்ஸில்
அழைத்து வரப்பட்டார். அதே நாளில் எழும்பூர் பெருநகர மாஜிஸ்ட்ரேட் முன்பு
ஆஜர் படுத்தப்பட்டார். 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்ட்ரேட்
உத்தரவிட்டார். மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டதால், ராம்குமார் ராயப்பேட்டை
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஜூலை 5 ஆம் திகதி
மாலை 4 மணி அளவில் ராம்குமார் ராயப்பேட்டை மருத்துவமனையிலிருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.
ஜூலை 6 ஆம் திகதி
ஜாமீன் வேண்டி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ராம்குமாரின் வழக்கறிஞர் பதிந்த ஜாமீன் மனுவை, நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஜுலை 12 ஆம் திகதி
காலை 10. 30 மணி அளவில் நடந்த அடையாள அணிவகுப்பில், சுவாதியின் தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன், ராம்குமாரை அடையாளம் காட்டினார்.
ஜூலை 13 ஆம் திகதி
ராம்குமாரை
மூன்று நாள் பொலிஸ் காவலில் விசாரிக்க மாஜிஸ்ட்ரேட் அனுமதி தந்தார்.
புதன்கிழமை மாலை நீதிமன்ற காவலில் இருந்து போலீஸ் காவலுக்கு சென்றார்.
ஆகஸ்ட் 19 ஆம் திகதி
ராம்குமாரின் அம்மா புஷ்பம் இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
செப்டம்பர் 2 ஆம் திகதி
சி.பி.ஐ விசாரணை கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
செப்டம்பர் 18 ஆம் திகதி
புழல்
சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ராம்குமார் மின்சாரம் பாய்ந்து
கொண்டிருக்கும் கம்பியைக் கடித்து தற்கொலை செய்து கொண்டதாக பொலிசார்
தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment