• Latest News

    September 19, 2016

    வடக்கு மாகாணத்தின் பிரேரணைக்கு எதிராக கிழக்கு பிரேரணை நிறைவேற்றாதிருப்பதேன்? : அதாவுல்லாஹ் கேள்வி

    எம்.ஏ.றமீஸ் -
    வடக்கு மாகாணத்தின் பிரேரணைக்கு எதிராக கிழக்கு பிரேரணை நிறைவேற்றாதிருப்பதேன்? : அதாவுல்லாஹ் கேள்வி
    வட மாகா­ணத்­தோடு கிழக்கை இணைப்­பது பற்றி வட மாகாண சபையில் முத­ல­மைச்சர் சீ.வி.வி­க்னேஸ்­வரன் தலை­மையில் பிர­க­ட­ன­மொன்று நிறை­வேற்­றப்­பட்­டி­ருக்­கின்­றது.

    இந்­நி­லையில் கிழக்கு மாகா­ணத்­தினை வட மாகா­ணத்­தோடு இணைப்­ப­தற்கு எந்தத் தேவையும் கிடை­யாது என கிழக்கு மாகாண சபையில் இது­வரை எந்தத் தீர்­மா­னத்­தி­னையும் கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் நிறை­வேற்­றா­தி­ருப்­பது ஏன் என நான் பகி­ரங்­க­மாக கேட்க விரும்­பு­கின்றேன் என முன்னாள் அமைச்­சரும் தேசிய காங்­கி­ரஸின் தலை­வ­ரு­மான ஏ.எல்.எம்.அதா­வுல்லாஹ் கேள்வி எழுப்­பி­யுள்ளார்.

    இதே­வேளை, ஜுலைக் கல­வரம் போன்ற பாரிய விட­யங்கள் இந்த நாட்­டிலே நிகழ்ந்த போதிலும் தமிழ் மக்கள் மனம் தள­ர­வில்லை அஞ்­ச­வில்லை கலங்­க­வில்லை திட­மா­கவே இருந்­தார்கள்.

    ஏனெனில் இப்­போ­துதான் எமக்கு தனி இராச்­சியம் பிறக்­கப்­போ­கின்­றது வெளி­நா­டுகள் இனி­மேல்தான் எம்மை ஏற்றுக் கொள்­ளப்­போ­கின்­றன என்று உறு­தி­யாக இருந்­தார்கள்.

    ஆனால் சில நாச­காரச் செயற்­பாட்­டா­ளர்­களால் எங்­கேனும் ஓர் சிறு கண்­ணாடி உடைக்­கப்­ப­டு­கின்­ற­போது எமது முஸ்லிம் சமூ­கத்தின் கவ­னமும் சிந்­த­னையும் கலைக்­கப்­பட்டு வேறு திசை­க­ளுக்கு அவர்கள் திருப்­பப்­ப­டு­வது வேத­னை­ய­ளிக்­கின்­றது என்றும் தெரி­வித்­துள்ளார்.

    அக்­க­ரைப்­பற்றில் பிர­தான வீதி­ய­ருகில் நேற்­று­முன்­தினம் இரவு இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் பிர­தம அதி­தி­யாகக் கலந்து கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

    இதன்­போது தொடர்ந்தும் அவர் உரை­யாற்­று­கையில், இன்­றைய சூழ்­நி­லையில் முஸ்லிம் சமூ­கத்தின் மத்­தியில் சிலர் வேண்­டு­மென்றே குழப்­பங்­க­ளையும் பிரச்­சி­னை­க­ளையும் தோற்­று­விக்க எத்­த­னிக்­கின்­றார்கள்.

    பொது­ப­ல­சேனா போன்ற பேரி­ன­வாத இயக்­கங்கள் முஸ்லிம் சமூ­கத்­தினை மாத்­திரம் ஏன் சாடு­கின்­றது. வட கிழக்­கிலும் வட கிழக்­கிற்கு வெளி­யேயும் எத்­த­னையோ பௌத்த குரு­மார்கள் கொன்று குவிக்­கப்­பட்­டார்கள்.

    அது­மட்­டு­மல்­லாமல் எத்­த­னையோ சிங்­களத் தலை­மைகள் வேண்­டு­மென்றே கொலை செய்­யப்­பட்­டார்கள் அது ஏன் அண்­மையில் கூட யாழ்ப்­பா­ணத்தில் பௌத்த சிலை­யொன்று தகர்க்­கப்­பட்­டது.

    இவற்­றுக்­கெல்லாம் ஏன் இந்த சிங்­களப் பேரி­ன­வாத அமைப்­புக்கள் குரல் கொடுக்­காமல் வாய் மூடி மௌனி­யாக இருக்­கின்­றன.
    டயஸ்­போ­ராக்கின் நிகழ்ச்சி நிர­லுக்கு ஏற்ப அவ் அமைப்­புக்கள் பெருந் தொகை­யான பணத்­தினைப் பெற்றுக் கொண்டு முஸ்­லிம்­களைச் சாடி­வ­ரு­கின்­றனர்.

    இன்­னு­மொரு சிங்­க­ள-­முஸ்லிம் கல­வ­ரத்­தினை இந்­நாட்டில் ஏற்­ப­டுத்த பொது­ப­ல­சேனா போன்ற சக்­திகள் முனைந்து கொண்­டி­ருக்­கின்­றன. இவ்­வா­றான கல­வ­ரங்­களை ஏற்­ப­டுத்தி வட கிழக்­கிலும் வட கிழக்­கிற்கு வெளி­யேயும் சிங்­கள மக்­க­ளுடன் முஸ்­லிம்கள் இணைந்து வாழ முடி­யாது என்ற நிலைப்­பாட்டைக் கொண்டு வரு­வ­தற்­கா­கவே இவ்­வா­றான விட­யங்கள் இடம்­பெற்று வரு­கின்­றன
    .
    சிங்­க­ள­வர்­களும் முஸ்­லிம்­களும் இணைந்து வாழ முடி­யாது போனால் முஸ்­லிம்­களும் தமி­ழர்­களும் ஒன்­றி­ணைந்து வாழ முடியும் என்ற நிலைப்­பாடு தோன்றும் ஆகையால் தமிழ் மக்­களும் முஸ்லிம் மக்­களும் செறிந்­துள்ள வடக்­கையும் கிழக்­கையும் இணைக்­கின்ற நிலை இதன்­மூலம் தோன்றும் என்ற பின்­னூட்டல் சக்­தி­க­ளா­லேயே இவ்­வி­ட­யங்கள் நடை­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன. இவ்­வா­றான சந்­தர்­ப்பத்­தினை நன்கு புரிந்து செயற்­பட வேண்­டிய தரு­ணத்தில் நாமி­ருந்து கொண்­டி­ருக்­கின்றோம்.

    வட மாகா­ணத்­தோடு கிழக்கை இணைப்­பது பற்றி வட மாகாண சபையில் முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் தலை­மையில் பிர­க­ட­ன­மொன்று நிறை­வேற்­றப்­பட்­டி­ருக்­கின்­றது. எமது கிழக்கு மாகா­ணத்­தினை வட மாகா­ணத்­தோடு இணைப்­ப­தற்கு எந்தத் தேவையும் கிடை­யாது என கிழக்கு மாகாண சபையில் இது­வரை எந்தத் தீர்­மா­னத்­தி­னையும் கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் நிறை­வேற்­றி­யி­ருக்­கின்­றாரா என நான் பகி­ரங்­க­மாக கேட்க விரும்­பு­கின்றேன். அதற்­கான முது­கெ­லும்பு அவ­ரி­டத்தில் இல்லை என்று அடித்துக் கூறு­கின்றேன். எமது மக்­க­ளையும் சமூ­கத்­தி­னையும் எண்­ணிப்­பார்க்­காத இவர்­க­ளெல்லாம் முஸ்லிம் தலை­மைகள் என்று சொல்லிக் கொள்­வதில் என்ன அர்த்தம் இருக்­கின்­ற­தென்று சிந்­தித்துப் பார்க்க வேண்டும்.

    ஊடகம், அர­சியல், பதவி போன்ற விட­யங்­களில் தர்மம் இருக்க வேண்டும். அந்தத் தர்­மத்தின் அடிப்­ப­டை­யி­லேயே நாம் செயற்­பட வேண்டும். பத்­தி­ரிகை ஆசி­ரி­யர்­களும், பத்­தி­ரி­கை­யா­ளர்­களும், நூலா­சி­ரி­யர்­களும் எல்லாத் திற­மை­சா­லி­களை விடவும் மிக முக்­கி­ய­மா­ன­வர்கள்.

    ஆனால் அவ்­வா­றா­ன­வர்கள் நெறிப்­ப­டுத்­தப்­பட வேண்டும். இவ்­வா­றா­ன­வர்கள் மனங்­களில் உறு­தியும் மன நிலை மாற்­றமும் வேண்டும். ஒரு விட­யத்­தினை எடுத்துக் கொண்டால் எமது புத்திக் கூர்மையின் அடிப்படையில் ஒரு விடயத்தினை ஒருவரால் வாழ்த்த வைக்கவும் முடியும். வஞ்சிக்க வைக்கவும் முடியும்.

    ஆக்கவும் முடியும் அழிக்க வைக்கவும் முடியும். ஆனால் அனைத்து விடயங்களையும் மனச்சாட்சியின் அடிப்படையில் சமநிலைப்படுத்தி தர்மத்தின் அடிப்படையில் அவ்விடயங்கள் வெளி உலகிற்குச் சொல்ல வேண்டும். அதற்காக ஊடகவியலாளர்கள் பக்கச்சார்பற்று நடு நிலைமையுடன் செயற்பட வேண்டும்.

    ஒரு விடயம் நடைபெறுகின்றபோது அவ்விடயத்தின்பால் சமூகத்திற்கு நன்மை கிடைக்குமென்றால் அதனை பெரிது படுத்துவதும், அவ்விடயத்தில் சமூகத்திற்கு தீமையும் பிரச்சினையும் நஷ்டமும் ஏற்படப் போகின்றதென்றால் அதனை மறைத்தும் விடுவதும் வேண்டும்.

    ஊடகவியலாளர்கள் ஒரு விடயத்தில் உள்ள நன்மை தீமை பற்றி நன்கு புலனாய்வு செய்து தர்மத்தின் அடிப்படையில் செய்திகளை வெளிஉலகிற்குச் சொல்ல வேண்டும் என்றார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: வடக்கு மாகாணத்தின் பிரேரணைக்கு எதிராக கிழக்கு பிரேரணை நிறைவேற்றாதிருப்பதேன்? : அதாவுல்லாஹ் கேள்வி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top