• Latest News

    September 28, 2016

    வார்த்தை ஜாலங்களால் ஏமாற்று அரசியலைத் தொடர எத்தனிக்கும் ஹக்கீம்

    அன்பான புத்திஜீவிகளே சற்று சிந்தியுங்கள். சாணக்கியமும் சாமர்த்தியமும் உள்ள அரசியல் செய்யவேண்டியுள்ளதால் விட்டுக்கொடுப்பு அரசியலை செய்கிறாராம் என இன்றைய பத்திரிகைகளில் ஹக்கீம் அறிக்கை.
    எது சாணக்கியம்?
    1. வடகிழக்கு இணைக்கப்படவேண்டும் என தமிழ் தரப்பு உறுதியாக கூறி ஒற்றைக்காலில் நின்று கொண்டிருக்கும் போது இன்றுவரை தான் சார்ந்த சமூகத்தின் நிலைப்பாடு என்னவென்று கூறாமல் இருப்பது சாணக்கியமா?
    2. முஸ்லிம்களின் பாதுகாப்பு மற்றும் இருப்பை கேள்விக்குறிக்குள்ளாக்கி இருக்கும் அதிகாரப்பகிர்வை உத்தேசயாப்பில் எழுதி முடித்து விட்டு பாராளுமன்றம் சமர்ப்பிக்கும் வரை ஒன்றும் பேசாமல் வாயை மூடிக் கொண்டிருப்பது சாணக்கியமா? இல்லை முஸ்லிம்களின் Islamic (Personal) law எடுக்கப்படக்கூடிய வகையில் உத்தேச யாப்பில் எழுதப்படும் வரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது சாணக்கியமா?
    3. ஐ.நா.வின் பான்கி மூன், ஹுசைன் போன்றவர்கள் இலங்கையில் வருகை தரும் போது வடக்கையும் தமிழ் தலைவர்களையும் மாத்திரம் சந்தித்து விட்டு முஸ்லிம்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லாதது போல் அவர்களைப் பற்றி சிந்திக்கவோ பேசாமலோ செல்வது ஹக்கீமின் சாணக்கியத்தாலா?
    4. வடக்கில் இழக்கப்பட்ட முஸ்லிம்களின் நிலங்களை பெற்றுக் கொடுக்க வாய்திறக்காத ஹக்கீம், தமிழர்கள் இழந்த நிலங்களை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னையில் கூறியது சாணக்கியமா?
    5. சர்வதேச யுத்த குற்றத்திகுள்ளாக்கப்பட்டதாக கருதப்படும் தமிழர்களுக்கு அவர்களின் தலைவர்கள் நியாயம் வேண்டி போராடும் போது அதேயுத்த குற்றங்களால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நியாயம் வேண்டி போராடாதது இவரின் சாணக்கியத்தாலா?
    6. கல்முனையின் உண்மையான சொந்தக்காரர்களாகிய முஸ்லிம்களை மோசடிகாரர்களாக சித்தரித்து, தமிழர்களுக்கு சொந்தமான கல்முனையை முஸ்லிம்கள் கபளீகரம் செய்கிறார்கள் என்று கோடீஸ்வரன் எம்பி பாராளுமன்றத்தில் பொய் பேசி ஹன்க்ஷாட்டில் பதியச்செய்து வடகிழக்கிற்கு சொந்தம் கொண்டாடும் வகையில் தமிழ் தலைவர்களால் தயாரிக்கப்பட்டிருக்கும் போலி அறிக்கைக்கு ஆவண ரீதியான ஆதாரம் சேர்த்த போது ஹக்கீம் பேசா மடந்தையாக இருந்து வேடிக்கை பார்த்தது சாணக்கியமா?
    7. இன்றேல், தனது தலைமைத்துவத்தைக் காப்பாறிக்கொள்ளும் நோக்கோடு கட்சியின் உயர்பீடத்தில் தனது சொந்தக்காரர்களையும் நண்பர்களையும் பெரும்பான்மையாக வைத்துக் கொண்டு வடகிழக்கு அரசியலில், தான் காலை கை என்று சொன்னால் ஆம் தலைவா நீ சொல்வதே சரி என்று கூறக்கூடிய படியாதவர்களையும் சுயநலக்கும்பல்களையும் அரசியல்வாதிகளாக்கி சமூகத்தை முட்டாளாக்கி அழகு பார்ப்பது சாணக்கியமா?
    இவற்றில் எது ஹக்கீமின் சாணக்கியமாம்?
    டாக்டர் யூஸுப் -
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: வார்த்தை ஜாலங்களால் ஏமாற்று அரசியலைத் தொடர எத்தனிக்கும் ஹக்கீம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top