• Latest News

    September 27, 2016

    சம்பந்தனின் குரலாக ரவூப் ஹக்கீம்

    இப்னு செய்யத் -
    முஸ்லிம் சமூகத்திற்காக குரல் கொடுக்க முடியாது நானிக் கூனி ,ருக்கும் மு.காவின் தலைவர் ரவூப் ஹக்கீம் எழுக தமிழ் பேரணிக்கு எதிராக குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றார். எழுக தமிழ் பேரணிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டியவர் இரா.சம்பந்தன். ஆனால், அவர் மௌனமாக இருக்கின்றார். இந்நிலையில் அவர் சொல்ல வேண்டிய கருத்தை ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளமை அவர் இரா.சம்பந்தனின் குரலாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார் என்பதனைக் காட்டுகின்றது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் திட்டத்திற்கு அமைவாக நடந்து கொண்டிருக்கும் ரவூப் ஹக்கீமை மு.காவில் உள்ளவர்கள் சிறந்த தலைவர் என்று அழைத்துக் கொண்டிக்கின்றார்கள். தமது சமூகத்திற்கு குரல் கொடுக்க முடியாதவர்கள் சிறந்த தலைவராக ,ருக்க முடியாது.

    பாலமுனையில் நடைபெற்ற மு.காவின் தேசிய மாநாட்டில் ,ரா.சம்பந்தன் போராடாத சமூகம் என்று முஸ்லிம்களைப் பார்த்து பகிரங்கமாக சொன்ன போது ரோசம் வராத ரவூப் ஹக்கீம் எழுக தமிழ் பேரணிக்கு எதிராக கருத்துக்களை சொல்லியுள்ளார். முஸ்லிம்களுக்கு இரா.சம்பந்தன் ஏசினாலும், இரா.சம்பந்தனுக்கு எதிராக யாரும் செயற்படுவதனை ரவூப் ஹக்கீம் ஏற்றுக் கொள்ளமாட்டார். வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முஸ்லிம்கள் அரசியலுக்காக மதத்தை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள் என்ற ,னவாத கருத்திற்கு பதலளிக்க சக்தியற்ற ரவூப் ஹக்கீம் எழுக தமிழ் பேரணிக்கு எதிராக கருத்துக்களை முன் வைத்துள்ளமை மூலமாக அவர் முஸ்லிம் சமூகத்திற்காக பேசமாட்டார் என்று நிருபிக்கப்பட்டுள்ளது.

    'பக்குவமாகவும், சாணக்கியமாகவும், சமயோசிதமாகவும் செயற்பட்டால் இனப்பிரச்சினைக்கு சகலரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வனைக் காண முடியும் என்ற நம்பிக்கை இருக்கின்றது' என்று ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். 

    கடந்த காலங்களில் முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்ட போது இதே கருத்தைத்தான் முன் வைத்தார். புலிகளுடன் ஒப்பந்தம் செய்துவிட்டும் இதே கருத்தையே சொன்னார். இபோதும் இதே கருத்தையே சொல்லிக் கொண்டிருக்கின்றார். ரவூப் ஹக்கீம் தமது சாணக்கியம், பக்குவம் மூலமாக முஸ்லிம் சமூகத்திற்கு பெற்றுக் கொடுத்த அல்லது கொடுக்கப் போகும் அரசியல் தீர்வு என்ன? 
     
    தலை நிமிர்ந்து வாழ்ந்த சமூகத்தை தமது இத்தகைய கருத்துக்களினாலும், கோடிகளுக்கு சோரம் போனமையாலும் முஸ்லிம் சமூகத்தை அடிமைச் சமூகமாக மாற்றிக் கொண்டிருக்கின்றார். வாய் பேசாது பக்குவம், சாணக்கியம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் அரசியல் விபச்சாரத்தை என்னவென்று அழைப்பது. கடந்த 15 வருடங்களாக முஸ்லிம் சமூகத்திற்காக சாதித்துக் காட்டாத ரவூப் ஹக்கீமை இன்னமும் நம்புவது முட்டாள்தனமாகும். 

    இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளை மேலும் சர்ச்சைகுள்ளாக்கும் வகையில் சில விடயங்கள் இடம்பெற்று வருகின்றன. வடக்கில் எழுக தமிழ் என்றும், கிழக்கில் கிழக்கு எழுச்சி என்றும் தெற்கில் சிங்ஹலே என்றும் விதவிதமான இனவாத தீவிர சக்திகள் தலை தூக்க தொடங்கியிருக்கின்றன. இவர்கள் வெவ்வேறு துருவங்களாக செயற்படுவதாக தென்பட்டாலும், ஒருவருக்கு ஒருவர் உதவுகின்ற பாணியிலேயே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.' என்று ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

    தமது அரசியல் வங்ரோத்து நிலையை அடைந்து கொண்டிருப்பது, கட்சியில் கேள்விகளை கேட்டுக் கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருப்பது ரவூப் ஹக்கீமின் தலைமைக்கு எதிரான சவாலாகும். இவற்றை மூடிமறைப்பதற்கு கிழக்கு எழுச்சியையும் இனவாத அமைப்பு என்று சொல்லுகின்றார். சம்பந்தன் முஸ்லிம்களை பார்த்து போராடாத சமூகம் என்று நன்றி கெட்டதனமாக பேசியதில் ரவூப் ஹக்கீம் இனவாதத்தை காணவில்லை. எழுக தமிழ் பேரணியில் உள்ளவர்கள் முஸ்லிம்களின் உரிமைகளை மறுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இதனால் இதனை இனவாதிகளின் கூட்டு எனச் சொல்லலாம். தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் முஸ்லிம்களின் உரிமைகளை மறுத்துக் கொண்டிருக்கின்றது. இணைந்த வடகிழக்கில் முஸ்லிம்களை அடிமைப்படுத்த எண்ணுகின்றது. இதனை இனவாதம் என்று ரவூப் ஹக்கீம் சொல்லவில்லை. ஆனால், கிழக்கு முஸ்லிம்களின் உரிமைக்காக பேசும் கிழக்கு எழுச்சியை இனவாத அமைப்பு என்று சொல்லுவது கிழக்கு எழுச்சி ரவூப் ஹக்கீம் மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதென்று புரிகின்றது. கிழக்கு எழுச்சி தமிழர்களின் உரிமைகளை மறுக்கவில்லை. மு.காவின் தலைமையை ஏற்றுக் கொள்ளவில்லை. 
     
    ரவூப் ஹக்கீம் முஸ்லிம்களின் உரிமைகளை 15 வருடங்களாக விலை பேசியுள்ளார் என்பதனால்தான் அவரின் தலைமையை ஏற்க முடியாதென்று கிழக்கு எழுச்சி சொல்லுகின்றது. கிழக்கு எழுச்சி இனவாதம் பேசவில்லை. பிரதேசவாதம் பேசுகின்றது. இந்த பிரித்தறிவு இல்லாதவராக ரவூப் ஹக்கீம் இல்லை. ஆனால், தமது குறையை மறைப்பதற்கு இடம் தேடிக் கொண்டிருக்கின்றார். இன்று ரவூப் ஹக்கீமின் தலைமை பதவியை பாதுகாத்துக் கொள்வதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பும், தமிழ் ஊடகங்களும் கண்ணில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு விழிப்பாகவுள்ளன. ஒரு முஸ்லிம் கட்சியின் தலைவரை பாதுகாக்க வேண்டிய அவசியம் இச்சக்திகளுக்கு ஏன் ஏற்பட்டுள்ளதென்று முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டும். 

    ஒரு சமூகத்தின் விடுதலை என்பது ரகசியமாக இருக்க முடியாது. தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேசிக் கொண்டிருப்பதாகவும், சில விடயங்களில் இணக்கம் கண்டுள்ளதாகவும் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அந்த இணக்கப்பாடுகள் என்னவென்று சொல்லுவதற்கு தயக்கம் காட்டுவது எதற்காக? முஸ்லிம் சமூகத்திற்காக எதையும் ரவூப் ஹக்கிம் பேசவில்லை. சம்பந்தன் தமிழ் சமூகத்தின் தேவைகளை பகிரங்கமாக பேசிக் கொள்கின்றார். ஏன் முஸ்லிம் சமூகத்தின் தேவைகளை பகிரங்கமாக பேசமுடியாது. முஸ்லிம்கள் என்ன அடிமைகளா? முஸ்லிம் சமூகத்தின் தேவைகள் மூடிய அறைக்குள் பேசும் விடயங்களா? 

    முஸ்லிம் சமூகத்தை விற்றுப் பிழைத்தது போதும். உங்களின் ஊன அரசியலை நிறுத்துங்கள். முஸ்லிம் கட்சிகள் ஊமைக் கட்சிகள் என்றாகி விட்டன. இனவாதிகளினால் முஸ்லிம் இனம் இழிபடுத்தப்படும் போது, உரிமைகள் மறுக்கப்படும் போது சமூகத்தின் பக்கம் நின்று நீதி கேட்காது, மாற்றாத் தோட்டத்தில் உள்ள பிரச்சினைகளை ஆராய்ந்து கொண்டிருப்பது ரவூப் ஹக்கிமின் இன்றைய நன்றிக்கடனாகும். முஸ்லிம் சமூகத்தின் இன்றைய தேவை உரிமைகளைப் பெற்றுக் கொள்ளக் கூடிய தலைவனை கண்டு கொள்வது. சிறந்த அரசியல் தலைவன் இல்லாத சமூகம் துடுப்பில்லாத படகிற்கு ஒப்பானது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சம்பந்தனின் குரலாக ரவூப் ஹக்கீம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top