(அகமட்
எஸ். முகைடீன், ஹாசீப் யாசீன்)
கடந்த
வருடம் நடைபெற்ற உயர்தரப் பரீட்சையில் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி மாணவன் மயில்வாகனம் சாறுஜன் விஞ்ஞானப் பிரிவில் சகல பாடங்களிலும் 'ஏ' தரச் சித்தியினைப்
பெற்று மாவட்ட மட்டத்தில் முதல் இடத்தை பெற்றமையினை பாராட்டி கௌரவிக்கு முகமாக மெஸ்றோ அமைப்பினால் மடிகணினி வழங்கி வைக்கும் நிகழ்வு கல்லூரி வளாகத்தில் இன்று (20) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின்
பிரதி அதிபர் எம்.சுபாந்திர ராஜா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் மெஸ்றோ அமைப்பின் ஸ்தாபகத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இம்மடிகணினியை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில்
கல்முனை வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் எஸ்.எல்.அப்துல் றஹீம், மெஸ்ரோ அமைப்பின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.நசீல்,
செயலாளர் சட்டத்தரணி எம்.சுல்பி, பிரதி அமைச்சரின் இணைப்புச்
செயலாளர் நௌபர் ஏ. பாவா, கார்மேல்
பற்றிமா கல்லூரி பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து
கொண்டனர்.
சாதனையாளரான
மாணவன் மயில்வாகனம் சாறுஜனை பாராட்டி கொளரவிப்பதன் மூலம் குறித்த மாணவனை இன்னும் பல சாதனைகளை புரிவதற்கு
தூண்டுதலாக அமைவதோடு ஏனைய மாணவர்களையும் சாதனையாளர்களாக மாறுவதற்கு வழிவகுக்கும் வகையில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் தானாக முன்வந்து குறிந்த மாணவனுக்கு மடிகணினி வழங்கி வைத்தார்.
இதன்போதுசாதனைமாணவன்உரையாற்றுகையில், வெற்றிக்குபங்களிப்புச்செய்தஅனைவருக்கும்நன்றிதெரிவித்ததோடுதன்னைபாராட்டிகௌரவித்துதனதுமேற்படிப்பினைசிறந்தமுறையில்முன்னெடுத்துச்செல்வதற்குஉதவியாகமடிகணினியினைவழங்கிவைத்தமெஸ்றோஅமைப்புக்கும்அதன்ஸ்தாபகத்தலைவரும், விளையாட்டுத்துறைபிரிதிஅமைச்சருமானஹரீஸ்அவர்களுக்கும்நன்றிகளைத்தெரிவித்ததோடுஅவரின்பணிகள்தொடரவாழ்த்துக்களையும்தெரிவித்தார்.

0 comments:
Post a Comment