அம்பாறை மாவட்டம் கல்முனை கல்வி வலயத்திலுள்ள நிந்தவூர் கமு/அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலையில் இவ்வருடம் நடைபெற்ற புலமைப்பரிசில் பரிட்சையில் 17 மாணவிகள் சித்தியடைந்துள்ளதாக கல்லூரியின் அதிபர் என்.யூ.எச்.எம்.சித்தீக் தினகரனுக்குத் தெரிவித்தார்நிந்தவூர் கோட்டத்தில் இருந்து ஒரே தடவையில் ஒரு பாடசாலையிலிருந்து 17 மாணவிகள் சித்தியடைந்திருப்பது இதுவே முதற் தடவையாகும். இப்பாடசாலையில் இருந்து எம்.ஹானி ஹம்தா 181, எம்.என்.எப்.சுஜைதா 174, எம்.எப்.ஹம்னா நதா 171, ஏ.ஏ.ஆயிசா 164, எஸ்.எப். அம்னா சிம்கா 163, எப்.எப்.நஜா 162, எம்.எச்.எப்.அப்லா 161, எம்.எப்.உப்.ஹம்னா 160, ஏ.எஸ்.எப். இன்சியா 159, எம்.ஏ.எப்.இப்கா 158, எம்.ஏ.எம்.கதீஜா மேர்சா 157, எப். பாத்திமா அபா 156, எல்.வை.என். சைனப் 156, எம்.என்.உப். வஸ்னா 156, எம்.ஏ. நிதா 155, எம்.எம். சீறத் பாத்திமா 153, ஆர். ஏ. ஹானி 152 ஆகியோர் சித்தியடைந்த மாணவிகளாவர்.கடந்த ஆகஸ்ட் மாதம் 21 ம் திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சையில் நாடுமுழுவதும் அமைக்கப்பட்ட 2959 பரிட்சை நிலையங்களில் 3 இலட்சத்து 50 ஆயிரத்து 701 பரிட்சாத்திகள் இப்பரிட்சைக்கு தோற்றியிருந்தனர். மாவட்ட வெட்டுப்புள்ளி அடிப்படையில் மாணவர்கள் புலமைப்பரிசிலுக்கு தெரிவு செய்யப்படுவது இங்கு குறிப்பிடத்தக்கது.
October 06, 2016
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment