• Latest News

    October 11, 2016

    முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை மட்டக்களப்பு விஜயம். ஏற்பாடுகள் மும்முரம்

    (பழுலுல்லாஹ் பர்ஹான்)
    முன்னாள் ஜனாதிபதியும்,குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ 11-10-2016 நாளை செவ்வாயக்கிழமை மட்டக்களப்பு நகருக்கும் விஜயம் செய்யவுள்ளார்.

    அங்கு விஜயம் செய்யும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மட்டக்களப்பு மங்களராம ரஜமஹா விகாரையில் நாளை காலை சுப நேரம் 11.18 மணிக்கு இடம்பெறவுள்ள யுத்தத்தின் போது உயிர் நீத்த இராணுவத்தினருக்கான நினைவுத் தூபி நிர்மாணிப்புக்கான அடிக்கல் நடும் நிகழ்விலும்,நாளை பிற்பகல் 2.மணிக்கு இடம்பெறவுள்ள ஆசிர்வாத பூஜையிலும் கலந்து கொள்ளவுள்ளதாக மட்டக்களப்பு நகரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

    இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மட்டக்களப்பு விகாரையில் கலந்து கொள்ளவுள்ள நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் மட்டக்களப்பு மங்களராம ரஜமஹா விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்னதேரர் தலைமையில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை மட்டக்களப்பு விஜயம். ஏற்பாடுகள் மும்முரம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top