• Latest News

    October 07, 2016

    வீதி அபிவிருத்திப் பணிகளை பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் நேரில் சென்று பார்வை

    (NFGG ஊடகப் பிரிவு)
    பாலமுனை CIG வீட்டுத்திட்ட பகுதியில் NFGG யினால் அமைக்கப்பட்டுவரும் வீதியினை அதன் தவிசாளர் பொறியிலாளர் அப்துர்ரஹ்மான் இன்று (07.10.2016) நேரில் சென்று பார்வையிட்டார். NFGG யின் பாலமுனைப் பிரதேச செயற்குழு உறுப்பினர்களான சியாட் மற்றும் றபாய்தீன் உட்பட இன்னும் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

    CIG பிரதேசத்தில் வசிக்கும் ஏழை மக்களினால் அன்றாடம் பாவிக்கப்படும் இந்த வீதி மணல் வீதியாக மிக நிண்ட காலமாக காணப்பட்டு வந்தது. இதனைப் போக்குவரத்துக்கு ஏற்ற வீதியாக அமைத்துத் தருமாறு இப்பிரதேச மக்கள் NFGG யிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர். இதன் அடிப்படையிலேயே இதனைத் தமது சொந்த நிதியிலிருந்து அமைத்துத் தருவதாக NFGG யின் தவிசாளர் அப்துர் ரஹ்மான் சில வாரங்களுக்கு முன்னர் அப்பிரதேச மக்களிடம் வாக்குறுதியளித்திருந்தார்.

    அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இவ்வீதி அமைப்புப் பணிகள் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் அப்துர் ரஹ்மான் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இவ்வீதி அமைப்புப் பணிகள் ஏறத்தாள பூர்த்தியடைந்திருக்கும் நிலையில் அதனை நேரில் சென்று பார்வையிடுமுகமாகவே இன்று அப்துர் ரஹ்மான் அப்பிரதேசத்திற்கு விஜயம் செய்திருந்தார்.

    இவ்வீதியானது பொது மக்களின் பாவனைக்காக மிக விரைவில் கையளிக்கப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
    Displaying WhatsApp Image 2016-10-07 at 4.14.24 PM (1).jpeg
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: வீதி அபிவிருத்திப் பணிகளை பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் நேரில் சென்று பார்வை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top