(எஸ்.அஷ்ரப்கான்)
உத்தேச தேர்தல் திருத்தச்சட்டம் சிறுபான்மை
பிரதிநிதித்துவத்தை வெகுவாக குறைக்கும் திட்டம் என முஸ்லிம் காங்கிரஸ்
தலைவர் ரஊப் ஹக்கீம் இப்போது கூறுவது அவரது தாமதமான அரசியல் ஞானத்தை
காட்டுகிறது என முஸ்லிம் உலமா கட்சி இன்று (10) தெரிவித்துள்ளது.
இது பற்றி அக்கட்சி மேலும் தெரிவித்ததாவது,
தேர்தல் திருத்தச்சட்டம், அரசியல் யாப்பு திருத்தம்
என்;பதல்லாம் நாட்டின் தற்போதைய முக்கிய பிரச்சினைகள் அல்ல என்பதே உலமா
கட்சியின் நிலைப்பாடாகும். அத்துடன் தொகுதிவாரி தேர்தல் என்பது அவசியமற்றது
என்றும் விகிதாசார தேர்தல் முறையே அனைவருக்கம் நல்லது என்றும் மஹிந்த
ராஜபக்ஷ காலம் முதல் உலமா கட்சி சொல்லி வருகிறது. ஆனால் மஹிந்த காலத்தில்
தேர்தல் திருத்தம் முதலில் கொண்டு வரப்பட்ட போது முஸ்லிம் காங்கிரஸ் அதற்கு
ஆதரவாக கையை உயர்த்தியது. பின்னர் நல்லாட்சியிலும் சில மாற்றங்களுடன்
இச்சட்டம் கொண்டு வரப்பட்ட போது பணத்துக்கும் பதவிக்கும் ஆசைப்பட்டு அதற்கு
கை உயர்த்தி விட்டு இப்போது அக்கட்சியின் தலைவர் மூக்கால் அழுவது மக்களை
ஏமாற்றும் நடவடிக்கையாகும்.
எம்மை பொறுத்த வரை வட்டார தேர்தல் என்பது வேட்பாளருக்குரிய
தேர்தல் செலவை குறைக்கும் என்ற நன்மையை விட வேறு நன்மை கிடையாது. அத்துடன்
அந்த வட்டாரத்தில் செல்வாக்குள்ள கட்சியே வெற்றிபெறக்கூடிய நிலைதான் உண்டே
தவிர சமூக சேவையாளர்கள் வெல்லக்கூடிய சாத்தியக்கூறுகள் மிக குறைவு. பணமும்,
பதவியுமே தேர்தலின் வெற்றியை தீர்மாணிக்கும் இக்காலத்தில் வட்டார தேர்தல்
முறையில் சாதகங்களை விட பாதகங்களே அதிகம்.

0 comments:
Post a Comment