• Latest News

    November 16, 2016

    நீரிழிவு நோயினால் உலகில் 50 வீதமானவர்கள் பாதிப்பு - இலங்கையில் 65 வீதமானவர்கள் - வைத்திய கலாநிதி நக்பர்

    அபு அலா -
    நீரிழிவு நோயினால் உலகில் 50 வீதமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 50 வீதமானவர்கள் இன்னும் சரியான முறையில் கண்டறியப்படவில்லை என்றும் அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரும்இ நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி நிலையத்தின் பதில் பணிப்பாளருமான வைத்திய கலாநிதி கே.எல்.எம்.நக்பர் தெரிவித்தார்.

    நேரிழிவு நோய் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் நிகழ்வு வைத்திய சிகிச்சை வழங்கும் சேவையும் இன்று (17) அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையில் இடம்பெற்றபோது மேற்கண்டவாறு கூறினார்.
    அவர் அங்கு மேலும் கூறுகையில்
    இலங்கையில் 65 வீதமானவர்கள் இந்த நோய் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளதாகவும்இ இதில் 35 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்டவர்களே மிக அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வின் அறிக்கை கூறுகின்றது. விஷேடமாக நகர்ப்புர பிரதேசங்களில் வாழ்கின்றவர்களே இந்த நோய் தாக்கத்துக்குள்ளாகியுள்ளனர். கிராமப்புரங்களில் வாழ்கின்றவர்களுக்கு இத்தாக்கம் குறைவாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

    சமகாலங்களாக நகர்ப்புர பிரதேசங்களில் வாழ்கின்ற மக்கள் கிராமப்புர வாழ்க்கையையும்இ உணவுப் பழக்கத்தையும் நாடிச் செல்கின்றனர். அத்துடன் அவர்களின் வைத்திய சிகிச்சைகளை பெற்றுக்கொள்வதற்காக ஆயுர்வேத வைத்தியத்தையே மிக மிக அதிகம் விரும்பி ஆயர்வேத வைத்திய சிகிச்சைகளை பெற்றும் வருகின்றனர். இந்த மாற்றங்கள் நாளுக்கு நாள் பொதுமக்களிடத்தில் கூடிக்கொண்டு வருவதையும் நாம் காணக்கூடியதாகவுள்ளது என்றார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நீரிழிவு நோயினால் உலகில் 50 வீதமானவர்கள் பாதிப்பு - இலங்கையில் 65 வீதமானவர்கள் - வைத்திய கலாநிதி நக்பர் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top