• Latest News

    November 01, 2016

    வடக்கு முஸ்லிம்கள், நிறைவேற்றியுள்ள 7 முக்கிய தீர்மானங்கள்..!

    வடக்கு முஸ்லிம்கள் 1990 ஆம் வருடம், ஒக்டோபர் மாதம் பாசிசப் புலிகளின் இனச்சுத்திகரிப்புக்கு உள்ளாகினர். அதன் 26 ஆவது வருட துயரத்தினத்தை வடக்கு முஸ்லிம்கள் கனத்த மனதுடன் நினைவுகூர்ந்தனர்.
    இதன்பொருட்டு சர்வதேச யாழ்ப்பாண அமைப்பு ஒன்றுகூடலினை (30.10.2016) அன்று பிரான்ஸில் ஏற்பாடு செய்திருந்தது. இதில் ஐரோப்பிய வாழ் வடக்கு முஸ்லிம்கள் பங்கேற்றனர்.
    இதன்போது முக்கிய சில தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. அவை கீழ்வருமாறு,
    1, தென்னிலங்கையில் கடந்தகாலங்களில் இடம்பெற்ற இனவாதச் செயற்பாடுகள் குறித்து பூரண விசாரணை நடாத்தி, அதன் பின்னணியில் செயற்பட்டவர்களுக்கு எதிராகசட்டநடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
    2, வடக்கும் கிழக்கும் இணைக்கப்படக்கூடாது. அவ்வாறு இணைத்தால் கிழக்கு முஸ்லிம்களின் பூரண சம்மதம் பெறப்பட வேண்டும்.
    3, வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை உறுதிப்படுத்தமுஸ்லிம் அரசியல் தலைமைகள், முஸ்லிம் அமைப்புக்கள் அனைத்தும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்.
    4, வடக்கு முஸ்லிம்களுக்கு எதிரான தமிழ் அரசியல்வாதிகளின், தமிழ் அரச அதிகாரிகளின், தமிழ் ஊடகங்களின் இனவாதச் செயற்பாடு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
    5, அகதி முகாம்களில் அல்லற்படும் வடக்கு முஸ்லிம்கள் மீள்குடியேற்றப்படுவதுடன், தமது தாயகத்தில் மீள்குடியேறியுள்ள முஸ்லிம்களுக்கான அடிப்படைத் தேவைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.
    6, இலங்கைக்கு வெளியே வாழும் சகல வடக்கு முஸ்லிம்களையும் ஒன்றுபடுமாறு இந்த ஒன்றுகூடல் வேண்டிக்கொள்கிறது.
    7 வடக்கு முஸ்லிம்கள் பெயங்களரலாதப் புலிகளினால் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்ட போது, அவர்களுக்கு அடைக்கலம் வழங்கிய புத்தளம் மாவட்டம் உள்ளிட்ட அனைத்து முஸ்லிம்களுக்கும், முஸ்லிம் ஊர்களுக்கும், முஸ்லிம் அமைப்புகளுக்கும் நன்றி சொல்கிறோம்.
    என்றும் மேற்படி இந்த நிகழ்வில் பங்கு கொண்டவர்களினால் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்த தீர்மானங்கள் pனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: வடக்கு முஸ்லிம்கள், நிறைவேற்றியுள்ள 7 முக்கிய தீர்மானங்கள்..! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top