நிந்தவூர் ஆதார வைத்தியசாலை நிர்மாணிப்புக்கு ரூபா 200 மில்லியன் 2017ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனை நிந்தவூாில் ஒரு குழுவினர் வெற்றி விழாவாகக் கொண்டாடினார்கள். பட்டாசு கொளுத்தி ஊரை ஆர்ப்பாிக்கச் செய்தார்கள்.
நேற்று இரவு (10.11.2016) நிந்தவூாில் தொடர்ச்சியாக பட்டாசு வெடிச் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. ஏன்? எதற்கு? பட்டாசுகளை கொளுத்துகின்றார்கள் என்று மக்கள் கண்டவர்கள், சென்றவர்களிடம் எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தார்கள். யாருக்கும் தொியவில்லை. பட்டாசு கொளுத்திக் கொண்டிருந்த இளைஞர்களிடம் விசாாித்த போது நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு ரூபா 200மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதற்காகவே பட்டாசுகளை கொளுத்துகின்றோம் என்றார்கள்.
0 comments:
Post a Comment