• Latest News

    November 11, 2016

    நிலையான அபிவிருத்தியினை இலக்காகக்கொண்ட திட்டங்கள்

    2016 ஆம் ஆண்டின் வரவு – செலவுத் திட்ட யோசனைகளின் தொடர்ச்சியாக 2017 ஆம் ஆண்டிற்கான திட்டம்

    நீண்­ட­கால பொரு­ளா­தார அபி­வி­ருத்தி இலக்­கு­க­ளையும் உட்­கட்­ட­மைப்பு அபி­வி­ருத்தி திட்­டங்­க­ளையும் உள்­ள­டக்­கி­ய­தா­கவும் உட­னடி வரு­மான அதி­க­ரிப்­புக்­கான திட்­டங்கள் இன்­றியும் எதிர்­வரும் 2017 ஆம் ஆண்­டுக்­கான வரவு–செல­வுத்­திட்டம் நேற்று நிதி­ய­மைச்­ச­ரினால் பாரா­ளு­மன்­றத்தில் முன்­வைக்­கப்­பட்­டது. அத்­துடன் 2016 ஆம் ஆண்­டுக்­கான வரவு–செல­வுத்­திட்­டத்தில் முன்­வைக்­கப்­பட்ட யோச­னை­களின் நீடிப்­பா­கவே இம்­முறை வரவு–செல­வுத்­திட்­டத்தின் யோச­னைகள் பெரு­ம­ளவில் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.
    மேலும் அரச மற்றும் தனியார் துறை ஊழி­யர்­க­ளுக்கு எவ்­வி­த­மான சம்பள உயர்வும் இம்­முறை வரவு – செல­வுத்திட்­டத்தில் முன்­வைக்­கப்­ப­ட வில்லை. மாறாக ஒரு சில உணவுப் பொருட்­க­ளுக்­கான விலைகள் குறைக்­கப்­பட்­டுள்­ளன.
    இதே­வேளை வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் 50 ஆயிரம் வீடு­க­ளையும் மலை­ய­கத்தில் 25 ஆயிரம்
    வீடு­க­ளையும் நாடு முழு­வதும் 5 இலட்சம் வீடு­க­ளையும் நிர்­மா­ணிப்­ப­தற்கு 2017ஆம் ஆண்­டுக்­கான வர­வு-­– செ­ல­வுத்­திட்­டத்தில் பரிந்­துரை செய்­யப்­பட்­டுள்­ளது.
    அத்­துடன் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளுக்கும் நாட்டின் ஏனைய மாகா­ணங்­க­ளுக்கும் இடையில் காணப்­ப­டு­கின்ற பொரு­ளா­தார இடை­வெ­ளியை 2020 ஆம் ஆண்­ட­ளவில் ஒழிப்­ப­தற்கும்
     அடுத்த வரு­டத்­திற்­கான வர­வு-­செ­ல­வுத்­திட்­டத்தில் யோசனை முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது.
     அனைத்துப் பாட­சாலை மாண­வர்­க­ளுக்கும் 2 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான காப்­பு­று­தித்­திட்­ட­மொன்றை அறி­மு­கப்­ப­டுத்­து­வ­தற்கும் 2020 ஆம் ஆண்­ட­ளவில் பல்­க­லைக்­க­ழக அனு­மதி பெறும் மாண­வர்­களின் எண்­ணிக்­கையை 50 ஆயி­ர­மாக உயர்த்­து­வ­தற்கும் ஒவ்­வொரு கிராம சேவகர் பிரி­வுக்கும் ஒரு மில்­லியன் ரூபா வீதம் ஒதுக்­கு­வ­தற்கும் வர­வு-­செ­லவுத் திட்­டத்தில் யோசனை முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது.
    இத­னி­டையே நேற்­று­முதல் அமு­லுக்கு வரும் நிலையில் குறைக்­கப்­பட்­டுள்­ளன. நெத்­தலி ஒரு கிலோ ஐந்து ரூபா­வி­னாலும் பயறு ஒரு கிலோ 15ரூபா­வி­னாலும் குறைக்­கப்­பட்­டுள்­ளன. அத்­துடன் பருப்பு ஒரு­கிலோ 10ரூபா­வி­னாலும் சீனி ஒரு கிலோ .2,ரூபா­வி­னலும் குறைக்­கப்­பட்­டுள்­ளன. மேலும் எரி­வாயு (12.5 கிலோ சிலிண்டர்) 25 ரூபா­வினால் குறைக்­கப்­பட்­டுள்­ளது. , மண்­ணெண்ணெய் ஒரு லீற்றர் 5ரூபா­வி­னாலும், உரு­ளைக்­கி­ழங்கு ஒரு கிலோ 5ரூபா­வி­னாலும் விலை குறைக்­கப்­பட்­டுள்­ளன.
    2017 ஆம் ஆண்­டுக்­கான வர­வு-­செ­லவுத் திட்­டத்தை நேற்­றைய தினம் பாரா­ளு­மன்­றத்தில் முன்­வைத்து உரை­யாற்­றிய நிதி அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க இந்த விட­யங்­களை தெரி­வித்தார். பிற்­பகல் 2 மணி­ய­ளவில் வர­வு-­செ­லவுத் திட்ட உரையை ஆரம்­பித்த நிதி அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க மாலை 5 மணி­வரை உரையைத் தொடர்ந்தார். இடை­யி­டையே ஆளும் கட்­சி­யி­னரின் கைத்­தட்­டல்­க­ளுக்கு மத்­தியில் நிதி அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க வர­வு-­செ­ல­வுத்­திட்ட உரையை தொடர்ந்தார்.
    அமைச்சர் தொடர்ந்து வர­வு-­செ­லவுத் திட்­டத்தை முன்­வைத்து உரை­யாற்­று­கையில்
    மக்­க­ளுக்கு சுமை ஏற்­ப­டா­த­வ­கை­யி­லான திட்­டங்­களை எமது வர­வு-­செ­லவுத் திட்­டத்தை முன்­வைக்­கின்றோம். குறிப்­பாக வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளுக்கும் நாட்டின் ஏனைய மாகா­ணங்­க­ளுக்­கு­மி­டையில் காணப்­ப­டு­கின்ற பொரு­ளா­தார இடை­வெ­ளியை 2020 ஆம் ஆண்டில் அகற்­று­வ­தற்­கான திட்­டங்­களை முன்­வைத்­தி­ருக்­கின்றோம். எதிர்­கா­லத்­திற்­கான அபி­வி­ருத்தி கட்­ட­மைப்பு ஒன்றை உரு­வாக்­கு­வ­தற்கு எதிர்­பார்க்­கின்றோம். எதிர்­கா­லப்­ப­ய­ண­மா­னது இல­கு­வா­ன­தல்ல. 2015 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 8 ஆம் திகதி வழங்­கிய வாக்­கு­று­தி­களை நாங்கள் நிறை­வேற்­றுவோம்.
    ஓய்­வூ­தியம்
    ஓய்­வூ­தியத் திட்­டத்தில் பாரிய சிக்­கல்­நிலை தோன்­றி­யுள்­ளது. எனவே ஓய்­வூ­திய முறை­மையை மாற்­றி­ய­மைப்­ப­தற்கு எதிர்­பார்க்­கின்றோம். விசே­ட­மாக பங்­க­ளிப்­புடன் கூடிய ஓய்­வூ­திய முறைமை ஒன்றை முன்­னெ­டுப்­ப­தற்கு நாங்கள் எதிர்­பார்க்­கின்றோம். இதற்­காக 1000 மில்­லியன் ரூபா ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. அத்­துடன் ஓய்­வூ­தியம் பெறு­ப­வர்­க­ளுக்­கான அக்­ர­கார காப்­பு­று­தித்­திட்டம் வாழ்நாள் முழு­வதும் கிட்டும்.  
    தேயிலை, இறப்பர்
    தேயி­லைத்­து­றை­யி­லான ஏற்­று­மதி வரு­மா­னத்தை 2020 ஆம் ஆண்டில் 5 பில்­லியன் டொலர்­க­ளாக உயர்த்­து­வ­தற்கு எதிர்­பார்க்­கின்றோம். மேலும் சீ.டி.சீ. வகை­யி­லான தேயிலை இறக்­கு­ம­தியை ஊக்­கு­விப்­ப­தற்கும் எதிர்­பார்க்­கின்றோம். இறப்பர் துறையில் முன்­னேற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக 900 மில்­லியன் ரூபாவை ஒதுக்­கீடு செய்­கிறோம்.   
    15 ஆயிரம் கரவைப் பசுக்கள்
    இலங்­கைக்கு ஒவ்­வொரு வரு­டமும் 81 ஆயிரம் மெற்­றிக்தொன் பால் இறக்­கு­மதி செய்­யப்­ப­டு­கின்­றது. எனவே 15 ஆயிரம் கரவைப் பசுக்­களை இறக்­கு­மதி செய்து பால்­பண்­ணை­யா­ளர்­க­ளுக்கு வழங்க இருக்­கின்றோம். இதற்கு 400 மில்­லியன் ரூபா ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.  
    மீன்­பிடி
    மன்னார், மட்­டக்­க­ளப்பு, அம்­பாந்­தோட்டை மாவட்­டத்தில் மீன்­பிடி உற்­பத்­தியை ஊக்­கு­விப்­ப­தற்கு 500 மில்­லியன் ரூபா ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. மேலும் நன்னீர் மீன் உற்­பத்­தியை ஊக்­கு­விப்­ப­தற்கும் நிதி ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.  
    கோழி
    கோழிப்­பண்ணை உற்­பத்­தி­யா­ளர்­க­ளுக்கு குளி­ரூட்­டி­களை பெற்­றுக்­கொள்ள நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். அந்­த­வ­கையில் 15 குளி­ரூட்­டிகள் பெற்­றுக்­கொ­டுக்­கப்­படும். இதற்­காக 75 மில்­லியன் ரூபா ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. அத்­துடன் கோழி ஒரு கிலோவின் விலையை 420 ரூபா­வாக பேணு­மாறு கோரிக்கை விடுக்­கின்றோம்.  
    வெள்ளம்
    மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் வெள்ளம் ஏற்­ப­டு­வதை தடுக்கும் நோக்கில் இரண்டு குளங்­களை இணைப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். மன்னார் மாவட்­டத்தில் தாரா­புறம் குளம் மறு­சீ­ர­மைக்­கப்­படும். இவற்­றுக்­காக 600 மில்­லியன் ரூபா ஒதுக்­கப்­படும். நாடு முழு­வதும் 1500 சிறிய குளங்­களை அபி­வி­ருத்தி செய்­வ­தற்கு 3000 மில்­லியன் ரூபா ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.  
    இறக்­கு­மதி சீனிக்கு வரி
    இறக்­கு­மதி செய்­யப்­படும் சீனிக்கு 2 வீத செஸ்­வ­ரியை அமுல்­ப­டுத்­த­வி­ருக்­கின்றோம். உள்­நாட்டு சீனி கைத்­தொ­ழிலை ஊக்­கு­விக்­கவே இந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.   
    கல்வி
    இதே­வேளை கல்­வித்­து­றைக்­காக 90 ஆயிரம் மில்­லியன் ரூபா ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. 2016 ஆம் ஆண்­டுடன் ஒப்­பி­டு­கையில் அடுத்த வரு­டத்­திற்­கான ஒதுக்­கீடு குறை­வா­கவே உள்­ளது. ஆனால் 2014 ஆம் ஆண்­டுடன் ஒப்­பி­டு­கையில் அதி­க­ளவு நிதி ஒதுக்­கீடு இடம்­பெற்­றுள்­ளது. அந்த வகையில் 5000 பாட­சா­லை­க­ளுக்கு கண­னிகள் பெற்­றுக்­கொ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன. அத்­துடன் உயர்­தர மாண­வர்­க­ளுக்கு டெப்கள் வழங்­கப்­படும்.   
    பல்­க­லைக்­க­ழக மாண­வர்­க­ளுக்கு டெப்கள் பெற்­றுக்­கொ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன. அனைத்து மாண­வர்­க­ளுக்கும் சேமிப்பு கணக்­குகள் ஆரம்­பிக்­க­பப்­ட­வேண்டும். மேலும் மாண­வர்­க­ளுக்கு 2 இலட்சம் ரூபா காப்­பு­றுதி செய்­து­கொ­டுக்­கப்­படும். 2020 ஆம் ஆண்டில் பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளுக்கு சேர்த்­துக்­கொள்­ளப்­படும் மாண­வர்­களின் எண்­ணிக்கை 50 ஆயி­ர­மாக அதி­க­ரிக்­கப்­படும். விசேட தேவை­யு­டைய சிறு­வர்­க­ளுக்­கான கொடுப்­ப­னவு 150 ரூபா­வாக அதி­க­ரிக்­கப்­படும். மேலும் இலங்­கையில் உயர் கல்வி கற்க வரும் வெளி­நாட்டு மாண­வர்­க­ளுக்கு ஐந்து வரு­டங்­க­ளுக்­கான பல்­நு­ழைவு வீசா வழங்­கப்­படும்.
    விவ­சாயம்
    எமது நாட்டின் விவ­சாயம் வர்த்­தக நோக்கில் முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும். இதற்­காக தொழி­லுட்ப வச­திகள் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட வேண்டும். மேலும் நாட்டில் பயன்­ப­டுத்­தப்­ப­டாது இருக்கும் காணி­களை விவ­சா­யத்­திற்­காக பயன்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.   
    போக்­கு­வ­ரத்து
    தனியார் பஸ் சேவையும் 11 மணி­வரை முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்­டி­யது அவ­சியம். பஸ் மற்றும் ரயில் கட்­ட­ணங்­க­ளுக்கு கார்ட் கொடுப்­ப­னவு முறையை அறி­மு­கப்­ப­டுத்­த­வி­ருக்­கின்றோம்.   
    இதே­வேளை அரச வைத்­தி­ய­சா­லை­களில் சிகிச்சை பெற்றுச் செல்லும் நோயா­ளர்­க­ளுக்கு அவர்­க­ளுக்கு செய்­யப்­பட்ட செலவு தொடர்­பான செல­வுச்­சீட்டு ஒன்று வழங்­கப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.
    ஏற்­று­மதி இறக்­கு­மதி வங்கி
    சர்­வ­தேச நிறு­வ­னங்கள் இலங்­கையில் தலை­மை­ய­கத்தை நிறு­வு­தற்கு விரும்­பினால் அவற்­றுக்கு வரி­ச­லுகை வழங்­கப்­படும். அத்­துடன் இலங்­கையில் ஏற்­று­மதி, இறக்­கு­மதி வங்­கி­யொன்றை நிறு­வ­தற்கும் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.   
    ஆட்­டோ­விற்கு பதில் கார்
    முச்­சக்­க­ர­வண்­டி­க­ளுக்கு பதி­லாக மின்­சார கார்கள், அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளன. முதல்­கட்­ட­மாக 1000 மின்­சாரக் கார்கள் கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்­ளன. மேலும் பாட­சாலை வேன்­க­ளுக்­குப்­ப­தி­லாக 32 ஆச­னங்­களைக் கொண்ட பாட­சாலை பஸ்கள் அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளன. இது தொடர்பில் ஒழுங்கு விதி­மு­றைமை ஒன்று கொண்­டு­வ­ரப்­படும்.  
    நாணயம்
    நாண­ய­மாற்று கட்­டுப்­பாட்டு சட்­டத்தை மாற்­றி­ய­மைப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். குறிப்­பாக வெளி­நாட்டு நிதி பிர­க­ட­ண­மா­னது 40 ஆயிரம் டொலர்­க­ளாக அதி­க­ரிக்­கப்­ப­ட­வுள்­ளன.  
    வீட்­டுத்­திட்டம்
    நாட்டின் குறைந்த வரு­மானம் பெறு­ப­வர்­க­ளுக்கு 5 இலட்சம் வீடுகள் அமைக்­கப்­படும். பெருந்­தோட்­டத்­து­றையில் 25 ஆயிரம் வீடுகள் அமைக்­கப்­படும். வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் 50 ஆயிரம் வீடுகள் நிர்­மா­ணிக்­கப்­படும். இதற்கு 5ஆயிரம் மில்­லியன் ரூபா ஒதுக்­கப்­படும். 10 வரு­டங்­க­ளுக்கு மேல் அர­சாங்க வீடு­களில் வசிப்­ப­வர்­க­ளுக்கு அந்த வீடு சொந்­த­மாக வழங்­கப்­படும்.  
    உள்­நாட்டு விமான சேவையை ஆரம்­பிக்க எதிர்­பார்க்­கின்றோம். இதில் பங்­கெ­டுக்­கு­மாறு தனி­யார்­து­றைக்கு அழைப்பு விடுக்­கின்றோம்.
    இரா­ணுவம்
    இரா­ணுவ வீரர்­களின் நலன்­பு­ரிக்­காக 350 மில்­லியன் ரூபா ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.  
    போதைப்­பொருள்
    போதைப்­பொருள் பாவ­னையை ஒழிக்கும் நோக்கில் பொலிஸ் திணைக்­க­ளத்­திற்கு 150 மில்­லியன் ரூபா பெற்­றுக்­கொ­டுக்­கப்­படும். போதைப்­பொருள் பாவ­னைக்கு அடி­மை­யா­கி­ய­வர்­களை புனர்­வாழ்வு செய்­வ­தற்கு மேலும் 50 மில்­லியன் ரூபா நிதி ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.   
    நீதித்­துறை
    நீதித்­து­றையை சுயா­தீ­ன­மாக கட்டியெழுப்புவதற்கு பிரதம நீதியரசர் உள்ளிட்ட தரப்பிடமிருந்து யோசனைகளை எதிர்பார்க்கிறோம்.  
    சமுர்த்திக்கு பதிலாக ஜன இசுர
    வறுமையைப் போக்குவதற்காக சமுர்த்தி வேலைத்திட்டமானது ஜனஇசுர என பெயர்மாற்றம் செய்யப்படுகின்றது. மேலும் நாட்டில் 20 வீதமான மக்கள் 300 ரூபாவிற்கு குறைந்த வருமானத்தை பெறுகின்றனர். இதனை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  
    கிராம சேவகர் பிரிவுக்கு 1 மில்லியன்
    நாட்டின் அனைத்து கிராம சேவகர் பிரிவுகளுக்கும் 1 மில்லியன் ரூபா வீதம் ஒதுக்கப்படும்.  
    விலை குறைப்பு
    ஒரு சில உணவுப் பொருட்களுக்கான விலைகளும் நேற்றுமுதல் அமுலுக்கு வரும் நிலையில் குறைக்கப்பட்டுள்ளன. நெத்தலி ஒரு கிலோ ஐந்து ரூபாவினாலும் பயறு ஒரு கிலோ 15ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளன. அத்துடன் பருப்பு ஒருகிலோ 10ரூபாவினாலும் சீனி ஒரு கிலோ .2,ரூபாவினலும் குறைக்கப்பட்டுள்ளன. மேலும் எரிவாயு (12.5 கிலோ சிலிண்டர்) 25 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. , மண்ணெண்ணெய் ஒரு லீற்றர் 5ரூபாவினாலும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 5ரூபாவினாலும் விலை குறைக்கப்பட்டுள்ளன  
    தொலைத் தொடர்பு வரி அதிகரிப்பு
    தொலைத்தொடர்புத் துறைக்கான (lavy) வரியானது 25 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
    வீரகேசாி -

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நிலையான அபிவிருத்தியினை இலக்காகக்கொண்ட திட்டங்கள் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top